Home » Archives by category » குட்டிக்கதைகள்

நான் என்ன சின்னக் குழந்தையா?

நான் என்ன சின்னக் குழந்தையா?

நாட்டை ஆளும் அரசன் ஒருவனிடத்தில், அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து தருகிறார். அரசன் கோபமாக ” நான் என்ன சின்னக் குழந்தையா? ” இதை வைத்து விளையாடுவதற்கு என்றுக் கேட்கிறார். சிற்பி “இல்லை அரசே, இது நம் வருங்கால ராஜாவுக்கு அதாவது நம் இளவரசருக்கு” என்கிறார். இந்த பொம்மைகளில் சில விசேஷங்கள் உண்டு.நான்கு பொம்மைகளின் ஒரு பக்க காதிலும் ஓட்டை இருக்கிறது பாருங்கள் என்கிறார். அரசன்…

இந்த மரத்தின் கதையைக் கேளுங்கள்.. (முழுவதுமாகப் படிக்கவும் )

இந்த மரத்தின் கதையைக் கேளுங்கள்.. (முழுவதுமாகப் படிக்கவும் )

சில வருடங்களுக்கு முன், ஒரு அழகான ஊரில் ஒரு பெரிய ஆப்பிள் மரம் இருந்தது. அந்த மரத்துடன் விளையாடுவதையே ஒரு சிறுவன் வழக்கமாக கொண்டிருந்தான்.தினமும் அந்த மரத்தை பார்க்க கண்டிப்பாக வந்திடுவான்.அந்த மரமும் அவனுடன் விளையாடி மகிழ்ந்தது. ஆப்பிள்களை பறித்து விளையாடுவது ,மரக்கிளையில் தொங்குவது, மரத்தைக் கட்டிக் கொள்வது என்று சின்ன சின்ன குறும்புகள் செய்து விளையாடிக் கொண்டிருந்தான். அவனை பார்க்கும் போதும், அவனுடன் விளையாடும் போதும் அந்த மரத்திற்கு…

முதலாளி மூளையிருக்கா?

முதலாளி மூளையிருக்கா?

ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது. அக்கடையில் முதலாளியே தொழிலாளி. ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், “முதலாளி மூளையிருக்கா?” என்று கேட்பான். அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான். இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்கவ…ேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை. நாட்கள்…

அறையில் ஒரு பெண் மட்டும்தான் இருக்கிறாள்

அறையில் ஒரு பெண் மட்டும்தான் இருக்கிறாள்

இரவில் தங்குவதற்கு ஒரு லாட்ஜூக்கு வந்து அறை காலியாக இருக்கிறதா என்று கேட்டான் ஒருவன் தனி அறை எதுவும் இல்லை.  இரண்டு பேருக்கான ஓர் அறையில் ஒரு பெண் மட்டும்தான் இருக்கிறாள்.  அவள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் இன்னொரு கட்டிலில் நீங்கள் ஓசைப்படுத்தாமல் போய் படுத்து தூங்கலாம்” என்றார் விடுதிக்காரர். வேறு வழியில்லாததால் வந்தவனும் அதற்கு சம்மதித்து அந்த அறைக்குப் போனான். அடுத்த பத்தாவது நிமிடம்…

பெண்மையை போற்றுவோம்!

பெண்மையை போற்றுவோம்!

திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர். அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி. போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி நியாபத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார். அவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவு அருகிலேயே…

முன்னபின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?

முன்னபின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?

நம்மாளு ஒருத்தன் புதுசா ஒரு யமஹா பைக் வாங்கி டெலிவரி எடுத்துகிட்டு ரோட்டுல வந்தான், அப்ப ரோட்டுல ஒரு பெரிய பணக்காரரு தன்னோட பெர்ராரி காருல போய்கிட்டு இருந்தாரு… அவருக்கு இணையா காருகிட்ட வந்தவன், “முன்ன பின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?” அப்படின்னு கேட்டான். அவரு நெனச்சாரு, “என்னடா நாம பெர்ராரில போறோம்,இவன் இப்படி கேக்குரானே” அப்படின்னு பதில் சொல்லாம வேகமா போயிட்டாரு.. நம்மாளு விடாம வேகமா துரத்தி போய் மறுபடியும்…

உருளைக்கிழங்கு – குட்டிக்கதை

உருளைக்கிழங்கு – குட்டிக்கதை

ஒரு சமயம் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா தன் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு ஒரு தட்டு நிறைய அவித்த உருளைக்கிழங்குகளை வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்பொழுது அவருடைய நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். பெர்னார்ட் ஷா அவரை வரவேற்று, “வாருங்கள்! உருளைக்கிழங்கு சாப்பிடுங்கள்“ என்றார். அதற்கு நண்பர், “உருளைக்கிழங்கா? நோ! நோ! எனக்கு அறவே பிடிக்காது. அதை எப்படித்தான் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களோ தெரியவில்லை“ என்றார். பெர்னார்ட்…

கழுதையே வா!

கழுதையே வா!

ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான், பயந்துபோய், “கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய்விடலாம். எதிரிகள் வருகிறார்” என்றான். கழுதை, “நான் வரவில்லை. நீ ஓடு!” என்றது. ”ஏன் கழுதாய்?” ”எதிரிகளுக்கும் பொதி சுமக்கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப்போகிறாதா?” என்றது. நீதி: அரசு மாறும்போது, ஏழை மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம் எஜமானர்களின் பெயர் மட்டுமே! -Ilaiyaraja Dentist…

அவன் பார்வையில் அந்தப்படம்!

அவன் பார்வையில் அந்தப்படம்!

என் சிறு வயது மகனை அருகில் இருந்த சலூனுக்கு அழைத்துப் போயிருந்தேன். காலியாக இருந்த நாற்காலியில் பையனை உட்கார்த்தி, சலூன்காரர் கட்டிங் செய்யத் தொடங்கிய பிறகுதான் கவனித்தேன்… எதிரே சுவரில் படு கிளாமராக ஒரு போஸ்டர்! நீலப் பூக்கள் இறைத்திருந்த சிக்கன் பிராவும் ஜட்டியும் அணிந்திருந்த அழகி ஒருத்தி, கடற்கரை மணல் துகள்கள் உடம்பில் ஆங்காங்கே ஒட்டியிருக்க, உல்லாசமாக மல்லாந்து படுத்திருந்தாள். சலூன்காரர் புதுசாகக் கொண்டு வந்து ஒட்டியிருக்கிறார். முன்பே…

கோடு

கோடு

ஒரு கோட்டை அழிக்காமலே அதை சிறிதாக்க முடியுமா என்று கேட்டார் ஆசிரியர். அறிவு மிக்க மாணவன் ஒருவன் அச்சிறு கோட்டின் அருகே ஒரு பெரிய கோட்டை வரைந்தான். ஆசிரியர் மாணவர்களிடம் சொன்னார், ”இதோ பாருங்கள், இந்தப் பெரிய கோடு நமக்கு என்ன அறிவிக்கிறது? வாழ்க்கையில் ஒருவன் பெரியவனாக விரும்பினால் அவன் மற்றவரை வதைக்கவோ அழிக்கவோ தேவையில்லை என்பதைத்தான். பெரியவன் ஆக விரும்புகிறவன் பெரிய காரியங்களைச்செய்தே மேல் நிலையை அடைய வேண்டும்”.…

ஆசை!

ஆசை!

ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர். மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு, “உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்” என்கிறது. மூவருக்கும் ஆச்சரியம்! உடனே கேஷியர் முந்திக்கொண்டு, “நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு…

அறிவின் முதிர்ச்சி

அறிவின் முதிர்ச்சி

விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார். அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள். நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள். என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி. அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள். அதற்கு ஸ்வாமிஜி உடனே…

எது மகிழ்ச்சி??

எது மகிழ்ச்சி??

கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே ” நான் குருடன், உதவுங்கள் ” என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது. அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை. அந்த வழியை கடந்த ஆண் ஒருவன், சிறுவனுக்கு உதவினான். பாக்கெட்டில்…

கந்தசாமி

கந்தசாமி

ஒரு ஊரில் கந்தசாமி என்ற பெயருடைய மனிதர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் முட்டாள் என்றும் பிழைக்கத் தெரியாதவர் என்றும் கேலி செய்து வந்தனர். இதைக் கேட்டுக் கேட்டு அந்த மனிதருக்கு வெட்கமாகிப் போய்விட்டது. அந்த ஊரின் எல்லையில் ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் சென்று அந்த மனிதர் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கேட்டார். “கடவுளை நினைச்சுத் தவம் செய். உனக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பார்…” என்று அந்தச் முனிவர்…

கொஞ்சம் சிரியுங்கள். உள்ளே இருக்கும் உண்மையை கொஞ்சம் சிந்தியுங்கள்

கொஞ்சம் சிரியுங்கள். உள்ளே இருக்கும் உண்மையை கொஞ்சம் சிந்தியுங்கள்

ஆண் : கடவுளே , ஏன் இந்தப் பொண்ணுங்கள மட்டும் இவ்ளோ அழகா படைச்ச? கடவுள் : அப்பதான நீங்கலாம் அவங்கள காதலிப்பிங்க ,அதுக்குத் தான். ஆண் : சரி , இவ்ளோ அழகா படைச்சிட்டு அப்புறம் ஏன் அவங்கள இப்படி முட்டாள் ஆக்கிட்ட? கடவுள் : ஓ..அதுவா!! அப்பதான அவங்க கண்ண மூடிட்டு உங்கள காதலிப்பாங்க..அதுக்குத் தான்.…

Page 1 of 512345