Home » Archives by category » கொறிக்க... » ஆன்மீகம்

புத்த பெருமானின் அனுபவ மொழிகள்…

புத்த பெருமானின் அனுபவ மொழிகள்…

* போர்க்களத்தில் வெற்றி பெற்ற வீரனைக் காட்டிலும் தன்னைத் தானே வென்றவனே சிறந்த வீரன். * வாழ்வில் அறநெறிகளை கடைப்பிடியுங்கள். இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தை அடைய இதுவே வழி. * அறிஞனோடு வாழ்ந்தாலும், முட்டாளால் அறிவைப் பெற முடியாது. குழம்பின் ருசியை ஒருபோதும் கரண்டியால் அறிய முடிவதில்லை. * உண்மையைப் பேசுங்கள். கோபத்தை தவிர்க்க முயலுங்கள். கையில் இருப்பதைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். * நரை, திரை தோன்றினால்…

கடவுளுக்கு கண் இருக்கிறதல்லவா!

கடவுளுக்கு கண் இருக்கிறதல்லவா!

ஒரு கண் தெரியாத மனிதர் கோவிலுக்குள் சென்றார். அங்கே ஒருவர், “உனக்கு கண் தெரியாது .. அதனால் கடவுளை உன்னால் காண முடியாது … பிறகு ஏன் கோவிலுக்குள் வந்தாய்?” என்றார். அதற்கு அந்த கண் தெரியாத மனிதர் சொன்னார், “எனக்கு கடவுளைப் பார்க்க கண் இல்லை என்பது உண்மைதான் .. ஆனால் கடவுளுக்கு என்னைப் பார்க்க கண் இருக்கிறதல்லவா!”…

கொடுத்தால்தான் கிடைக்கும்!

கொடுத்தால்தான் கிடைக்கும்!

கிருபானந்த வாரியார் சுவாமிகள், சொற்பொழிவின் போது, தோளில் மாலை அணிந்தபடியே பேசுவது வழக்கம். ஒருமுறை திருவாரூரில் சொற்பொழிவு! அப்போது மேடையில் இருந்த வாரியார் சுவாமிகளுக்கு, மாலை அணிவிப்பதற்காக அன்பர் ஒருவர் வந்தார். ஏற்கெனவே சுவாமிகளின் கழுத்தில் மாலை இருந்ததால், தன்னிடம் இருந்த மாலையை அணிவிக்காமல் கையில் வைத்தபடியே நின்றார். இதைப் புரிந்து கொண்ட சுவாமிகள், தோளில் கிடந்த மாலையைக் கழற்றி, அருகில் இருந்தவரிடம் கொடுத்தார். உடனே இதற்காகவே காத்திருந்தவர் போல்,…

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்! கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!!

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்! கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!!

நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம். நாயைக் கண்டால் அடிப்பதற்குக் கல்லைக் காணவில்லை. கல் இருக்கும் போது, நாய் அங்கு இல்லை என்பது போலத்தான் பொருள் கொண்டு இப் பழமொழி தற்போது பிரயோகிக்கப்படுகிறது. இதன் உண்மைப் பொருள். பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி… சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின.. இங்கே ஒரு சிற்பி இறைவனின் உருவத்தை கல்லில் சிற்பமாக…

நான் திராட்சைப்பழம் சாப்பிடலாமா?

நான் திராட்சைப்பழம் சாப்பிடலாமா?

ஒருவன் ஒரு மகானிடம் சென்று, “ஐயா, நான் திராட்சைப்பழம் சாப்பிடலாமா?” என்று கேட்டான். “தாராளாமாக சாப்பிடலாம்” என்றார் மகான். “தண்ணீர் குடிக்கலாமா?” என்று கேட்டான் அவன். “குடிக்கலாம்” என்றார் மகான். “சிறிது புளிப்புப் பொருள்…” என்று இழுத்தான் அவன். “தவறேதும் இல்லை…சாப்பிடலாம்” என்றார் மகான். “இவை மூன்றையும் சாப்பிடலாம் என்கிறீர்கள்… இவை மூன்றையும் சேர்த்து தானே மது தயாரிக்கப்படுகிறது… அதை ஏன் சாப்பிட வேண்டாம் என்கிறீர்கள்?” என்றான் அவன். உடனே…

இது கதையல்ல நிஜம்!

இது கதையல்ல நிஜம்!

கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார். இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான கிண்டலுடன், “சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.? கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள். வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்த மணமக்களின் தந்தையரை…

புத்தரின் அன்பு

புத்தரின் அன்பு

பெரியவர் ஒருவருக்கு புத்தரின் மீது கடுங்கோபம். தன் மகன் திருமணம் செய்து கொள்ளாமல் புத்தரின் சீடனாகி விட்டான் என்பதே அவரது கோபத்துக்கு காரணம். ஒருநாள் அந்த பெரியவரின் ஊர் வழியாக புத்தர் சொற்பொழிவுக்கு செல்ல வேண்டியிருந்தது. இதை அறிந்து அந்த பெரியவர் புத்தரை வழிமறித்து திட்டத் தொடங்கினார். வாய்க்கு வந்தபடி அசிங்கமான வார்த்தைகளை பிரயோகித்து திட்டினார். புத்தர் கொஞ்சமும் கோபப்படவில்லை. வெகுநேரம் வழிமறித்து திட்டிக் கொண்டே இருந்ததால் போதனைக்கு செல்ல…

திருமணத்தின் போது இந்த சடங்குகளை ஏன் செய்கின்றோம்?

திருமணத்தின் போது இந்த சடங்குகளை ஏன் செய்கின்றோம்?

திருமணத்தில் அரசாணிக்கால் நடுதல் ஏன் ?   அரச மரத்தின் வேரில் பிரம்மதேவனும், அடியில் திருமாலும், நுனியில் சிவமூர்த்தியும் இருக்கிறார்கள். அரசமரம் மும்மூர்த்தி ஸ்வரூபம். அதனால், சுமங்கலிகள் அரசமரத்தின் கிளயப் பாலும் பன்னீரும் விட்டுப் பூசித் மும்மூர்த்திகளயும் அங்கு எழுந்தருளச் செய்கின்றார்கள். கும்பம்: கங்க புனிதமான. எல்லாவற்றயும் தூய்ம செய்வ தண்ணீர். ?நீரின்றி அமயா உலகு? என்ப பொய்யாமொழி. தண்ணீரால் பயிரும், உயிரும் தழக்கின்றன. ஆகயால், மணவறயில் கும்பத்தில் நீர்…

தேங்காய் உடைப்பதன் தத்துவம்

தேங்காய் உடைப்பதன் தத்துவம்

கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல். தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய…