Home » Archives by category » குட்டிக்கதைகள் (Page 5)

வேகமா போனா லேட்டாகுமா?

வேகமா போனா லேட்டாகுமா?

குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாய் வந்துகொண்டிருந்தான் ஒருவன். குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே சிறுவன் ஒருவன் நின்றிருந்தான். ‘‘தம்பி, இந்த ரோட்ல போனா ஊர் வருமா?’’ ‘‘வருமே’’ என்றான் சிறுவன். ‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’ ‘‘மெதுவா போனா பத்து நிமிஷத்துல போயிறலாம். வேகமாய்ப் போனா அரைமணி நேரம் ஆகும்’’ சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரைவண்டிக்காரனுக்குக் கோபம். ‘‘மெதுவா போனா சீக்கிரம் போயிரலாம்? வேகமா…

இதெல்லாம் எதுக்கம்மா?

இதெல்லாம் எதுக்கம்மா?

தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் ஒரு மாலைப் பொழுதில் உலாத்திக் கொண்டிருந்தன. குட்டி ஒட்டகம் படு சுட்டி. சதா வாய் ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும். அன்றைக்கும் அப்படித்தான். “அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே. ஏனம்மா?” தாய் எப்போதும் பொறுமையாக பதில் சொல்லும். “நாமெல்லாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள் இல்லையா! பாலைவனத்தில் தண்ணீர் பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் கிடைக்கும். தினம் தினம் கிடைக்காது. கிடைக்கும் தண்ணீரை…

ஆலோசனை

ஆலோசனை

தன் முன்னால் வந்து நின்ற ஓநாயை விரோதமாகப் பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து நின்றது முள்ளம் பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், ‘‘பயப்படாதே முள்ளம் பன்றி, உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கேன்’’ என்றது. ‘‘என்னது? நான் அழகா?’’ ‘‘ஆமா. நீ அழகுதான். ஆனா, அந்த முள்ளு முள்ளா இருக்கிறதுதான் உன் அழகைக் கெடுக்குது’’ என்றது ஓநாய்.…

எல்லாம் எனக்குத் தெரியும்

எல்லாம் எனக்குத் தெரியும்

குருவிடம் வந்தான் மாணவன். வரும்போதே அவனிடம் அலட்சியமும் பெருமையும் இருந்தது. ‘‘குருவே இன்றோடு உங்களிடம் படிக்க வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன’’ என்றான் மாணவன். ‘‘அப்படியா?’’ ‘‘ஆமாம் குருவே. நான் எல்லாவற்றையும் கற்றுவிட்டேன். இனி தனியாக ஒரு குருகுலம் ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்.’’…

நவீன திருவிளையாடல்

நவீன திருவிளையாடல்

சிவபெருமானும், மனைவி பிள்ளைகளாக இருந்து இணையத்தில் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள் அப்பொழுது அங்கே தோன்றிய நாரதர் தன்கையில் இருந்த அருங்கனியான மாங்கனியைக்காட்டி இறைவா நான் உங்களுக்கு இந்த மாங்கனியை அளிப்பதற்க்கு கொண்டு வந்துள்ளேன் என்றார் உடனே அதை பெற்றுக் கொண்ட சிவன் தன் மகன்கள் அருகில் இருப்பதைக்கண்டு அவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க நினைத்தார் உடனே நாரதர் இது இலங்கையிலிருந்து கொண்டு வந்த மாங்கனி அங்கே இருப்பவர்கள் எதையும் பிரித்துக் கொடுக்க சம்மதிக்க மாட்டார்கள்…

பந்தயம்

பந்தயம்

பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார். ”நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் பீர் குடிப்பவர் களுக்கு 200 டாலர் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு 200 டாலர் தர வேண்டும். சவாலுக்குத் தயாரா?” என்று அறிவித்தார். யாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார். ”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார்.…

சேதி

சேதி

காட்டுக்குள் நடந்தார், ஒரு சந்நியாசி. இரண்டு கால்கள் உடைந்துபோன ஒரு நொண்டி நரியை அங்கே கண்டார். ‘ஐயோ, உணவுக்கு இந்த நரி என்ன செய்யும்!’ என்று கவலைப்பட்டார். அப்போது, சிங்கம் ஒன்று தான் வேட்டையாடிய இறைச்சியை இழுத்து வந்து நரியின் அருகில் போட்டது. கடவுள் அவருக்கு ஏதோ சேதி சொன்னது போல் இருந்தது. தனக்கான உணவு கிடைக்க வேண்டுமானால், அதை எப்படியும் தெய்வம் கிடைக்கச் செய்யும் என்று முடிவு செய்தார்.…

Page 5 of 512345