Home » Archives by category » கொறிக்க... » நறுக்குகள்

ஆண்களின் தலைமுறை மாற்றங்கள்…

ஆண்களின் தலைமுறை மாற்றங்கள்…

1. நம்ம அப்பாவெல்லாம் பெல்ஸ் பேன்ட்டும், கட்டம் போட்ட சட்டையும் தான் அதிகம் அணிந்தார்கள். நாம் ஜீன்சும் டீ ஷர்ட்டும் தான் அதிகம் அணிகிறோம். 2. நம்ம அப்பாவெல்லாம் சீப்பை வைத்து தான் தலை வாரினார்கள். நமக்கு கைகளை சீப்பாக்கி தலைவாரினால் தான் பிடிக்கும். 3. நம்ம அப்பாவெல்லாம் மீசையை வீரத்தின் அடையாளமாகப் பார்த்தார்கள். நாம் வயதின் அடையாளமாகப் பார்க்கிறோம். மீசை பெரிதாய் இருந்தால் வயதானது போல் தெரியும் என்று…

தோகை விரிக்காத மயில்…

தோகை விரிக்காத மயில்…

தோகை விரிக்காத மயில் தன் அழகை தானே அறிவதில்லை! சிறகு விரிக்காத பறவை தன்னால் எவ்வளவு தூரம் பறக்க முடியும் என்பதை தானே அறிவதில்லை! கூவத் தயங்கும் குயில் தன்னால் பாடமுடியும் என்பதை தானே அறிவதில்லை! முயற்சி செய்யாத மனிதன் தன்னிடம் என்ன இருக்கிறது, தன்னால் எது இயலும் என்பதை தானே அறிவதில்லை! # உங்கள் திறமைகளை முதலில் நீங்கள் கண்டுகொள்ளுங்கள். -ஆதிரா…

எனக்கு ஒரே டவுட் டவுட் டா வருதே…

எனக்கு ஒரே டவுட் டவுட் டா வருதே…

1. காலம் மாறிப் போச்சு, காலம் மாறிப் போச்சுன்னு சொல்றோமே..மாறுனதும் மாறிக்கிட்டே இருக்கறதும் நாம தானே? 2. எனக்கு இந்த ட்ரெஸ் சின்னதா போயிருச்சுன்னு சொல்றோமே..ட்ரெஸ் எப்படிங்க சின்னதா போவும்? நாம தான வளர்ந்துட்டோம். 3. முள்ளு குத்திருச்சின்னு சொல்றோமே.முள்ளு நம்மள தேடி வந்தாங்க குத்துச்சு? 4. பணம் காணாம போயிருச்சுன்னு சொல்றோமே.. என்னைகாது நான் பணத்தை தொலைச்சுட்டேன்னு சொல்றோமா? 5. புது செருப்பு கால் ல கடிச்சிருச்சின்னு சொல்றோமே..…

என் ஆவி பிரியும்போது வெளிச்சமாக இருக்கட்டும்

என் ஆவி பிரியும்போது வெளிச்சமாக இருக்கட்டும்

தெரிந்து கொள்வோம்: எடிசனின் உயிர் பிரியும்போது கடைசியாக ‘விளக்கை எரியவிடுங்கள் என் ஆவி பிரியும்போது வெளிச்சமாக இருக்கட்டும்!’ என்றாராம்!!. ஆண்களாக பிறந்து பெண்ணாக உணருபவர்கள் ‘திருநங்கை’ பெண்ணாக பிறந்து ஆணாக உணருபவர்கள் ‘திருநம்பி’!. தலைவா படத்துக்காக தற்கொலை பண்ணிக்கிறது ரஜினி படத்துக்காக மண்சோறு திங்கிறது போன்றவை Celebrity Worship Syndrome என்ற மனநோய் வகையறாக்கள்!!. பறவை இனங்களில் ஆந்தை மட்டுமே கண் சிமிட்டும் போது மேல் இமையை மூடுகிறது மற்ற…

மகாராணிகள்

மகாராணிகள்

ஆங்கிலேயர் ஒருவரும், அரபுநாட்டு காரர் ஒருவரும் உரையாடிக்கொள்கிறார்கள்……. அரபுநாட்டு காரரை பார்த்து ஆங்கிலேயர் கேட்கிறார்….. ஆங்கிலேயர்: உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள், கை குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே….. அரபி மனிதர்: உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள் நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா ? ஆங்கிலேயர்: அது முடியாதே…… அரபி மனிதர்: ஏன் முடியாது ? ஆங்கிலேயர்: அவர்கள்…

மூன்று என்ற சொல்லினிலே…

மூன்று என்ற சொல்லினிலே…

மிகக் கடினமானவை மூன்றுண்டு: 1. இரகசியத்தை காப்பது. 2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது. 3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது. நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்: 1. இதயத்தால் உணர்தல். 2. சொற்களால் தெரிவித்தல். 3. பதிலுக்கு உதவி செய்தல். மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு: 1. சென்றதை மறப்பது. 2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது. 3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது. இழப்பு மூன்று வகையிலுண்டு: 1. சமையல் அமையாவிட்டால்…

இல்லை! இல்லை !! இல்லை !!!

இல்லை! இல்லை !! இல்லை !!!

அரேபியாவில் ஆறுகள் இல்லை அத்தி, பலாமரங்கள் பூ பூப்பதில்லை. ஆமைக்குப் பற்கள் இல்லை. இந்திய ஜனாதிபதிக்கு ஓய்வுபெறும் வயதிற்கு வரம்பு இல்லை. இனிப்பை உணர்ந்தறியும் சக்தி பூனைக்கில்லை. இலந்தைமரங்களில் பறவைகள் கூடு கட்டுவதில்லை. ஈசலுக்கு வயிறு இல்லை. உலகில் 26 நாடுகளில் கடலோ, கடற்கரையோ இல்லை. ஐஸ்லாந்தில் ரெயில்கள் இல்லை. ஒட்டகங்களுக்கு நீந்தத் தெரிவதில்லை. ஹவாய்த் தீவில் பாம்புகள் இல்லை. கடலில் முதலைகள் வாழ்வதில்லை. பல்லி தண்ணீர் குடிப்பதே இல்லை.…

உண்மை உணரப்படுமா?

உண்மை உணரப்படுமா?

ஒரு காலத்தில் இந்த இடம் கடலாக இருந்தது. கப்பல்களும் சென்று வந்தன. இன்று ஒட்டகங்கள் மேயும் பாலைவனம்!……. இது மனிதன் இயற்கைக்கு விளைவித்த அநீதி! மனிதன் மாறுவானா? மாறாவிட்டால் அழிவு நிச்சயம். -Subash Krishnasamy…

வெற்றி விற்பனைக்கு அல்ல

வெற்றி விற்பனைக்கு அல்ல

கடவுளே நான் இதில் ஜெயித்து விட்டால் உனக்கு பொங்கல் வைக்கிறேன். எனக்கு மட்டும் கேட்டது கிடைத்து விட்டால் உனக்கு கிடா வெட்டுகிறேன். வருவோரெல்லாம் வியாபாரம் பேசுகிறார்கள் கடவுள் தீர்மானித்து விட்டார். நாளைக்கே கோவில் வாசலில் எழுதி ஒட்டிவிடவேண்டும் “வெற்றி விற்பனைக்கு அல்ல” என்று..! -Kali Muthu…

மதம்!

மதம்!

ஸ்ரீ ரங்கத்திலே ஒரு யானை இருந்தது. 1918 -19 ல் ஒரு வழக்கு. யானைக்கு வடகலை நாமம் போடுவதா அல்லது தென்கலை நாமம் போடுவதா என்ற பிரச்சினை வைணவகளுக்குள் ஏற்பட்டது. அப்பொழுது நீதி மன்றங்களை கடந்து, பிரைவி கவுன்சில் வரைக்கும் வழக்குப் போனது. கவுன்சிலிலே விசாரித்து ஒரு உத்தரவு போட்டார்கள். யானைக்கு ஒரு மாதம் வடகலை நாமம், ஒரு மாதம் தென்கலை நாமம் போடலாம் என்று சமரச தீர்ப்பு கொடுக்கப்பட்டது.…

நாளை என்னவாகப் போகிறீர்கள்?

நாளை என்னவாகப் போகிறீர்கள்?

எவ்வளவு பெரிய ராஜ்யத்தை ஆளும் அரசனாக இருந்தாலும் அவனும் ஒரு காலத்தில் அழுது கொண்டிருந்த குழந்தை தான். எத்தனை பெரிய அடுக்குமாடி கட்டிடமாக இருந்தாலும் அதுவும் ஒரு காலத்தில் வரைபடம் தான். எவ்வளவு அழகான சிலையாக இருந்தாலும் அதுவும் ஒரு காலத்தில் வெறும் கல் தான். நீங்கள் இன்று என்னவாக இருக்கிறீர்கள் என்பது ஒரு போதும் முக்கியமல்ல. நாளை என்னவாகப் போகிறீர்கள் என்பதே முக்கியம்.…

தெரிந்துக்கொள்ளுங்கள்

தெரிந்துக்கொள்ளுங்கள்

1. தரைப்படை வீரர்கள் கல்லூரி அமைந்துள்ள இந்திய நகரம் புனே. 2. எழுமிச்சை பழம் முதன் முதலில் பயிரான நாடு ஈரான். 3. வீடுகளுக்கு எண் கொடுக்கும் முறையை அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ். 4. மிகச்சிறிய பெருங்கடல் ஆர்டிக். 5. கையால் எழுதப்பட்ட கரன்சி நோட்டுகளை முதல் முதலில் பழக்கத்தில் விட்ட நாடு இங்கிலாந்து. 6. வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்ட ஆண்டு 1911. 7. உலகில் மிகப்பெரிய சிகரங்களைக் கொண்ட…

வயிற்றுப்பசி

வயிற்றுப்பசி

நீருக்கும் நெருப்புக்கும் நொடிக்கொரு கலவரம் பசிக்கு நீர் பருகும் ஏழையின் வயிற்றில் இல்லாத நிலை வந்தும் இணைப்பிரியா நண்பனாய் வாழ்க்கை முடியும் வரை வயிற்றுப் பசி மட்டும் வேருக்கு நீரின்றி வாடிப் போகும் வண்ண மலர்களாய் பிச்சை கேட்க்கும் பச்சைக் குழந்தைகள் எத்தனை ஏகாதிப்பத்தியம் வந்தாலும் ஏழையின் வயிற்றுக்கு தினம் தினம் பசியும் பட்டினியும் எழுதப்படாத சரித்திரமாய் -Kali Muthu…

நாவினால் சுட்ட வடு….

நாவினால் சுட்ட வடு….

ஒரு முன் கோபக்காரன் ஒருவன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும். கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசிவிடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப்படுவான். நாளடைவில் அவனை சுற்றுவட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை. அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒருநாள் அவனிடம்…

எம்.ஜி.ஆர், கவிஞர் வாலி.. உலகம் சுற்றும் வாலிபன்…

எம்.ஜி.ஆர், கவிஞர் வாலி.. உலகம் சுற்றும் வாலிபன்…

கவிஞர் வாலியும், எம்.ஜி.ஆரும் உலகம் சுற்றும் வாலிபன் என்ற படம் சம்பந்தமான பாடல் கம்போஸிங்ல இருந்தப்ப, வாலி ஏதோ சொன்னதுல எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்துடுச்சு. ‘‘இந்த மாதிரி பேசினேன்னா, உன் பேரு படத்தோட டைட்டில்ல வராமப் பண்ணிடுவேன்’’ அப்படின்னாரு. ‘‘நீங்க நினைச்சா எந்தப் படத்தோட டைட்டில்லயும் என் பேர் வராம பண்ணிட முடியும் அண்ணே, ஆனா இந்த படத்தோட டைட்டில்ல என் பேர் வராம உங்களால படத்தை ரிலீஸ் பண்ணவே…

Page 1 of 3123