Home » Archives by category » குட்டிக்கதைகள் (Page 2)

கடவுளும் குழந்தையும்..

கடவுளும் குழந்தையும்..

இன்னும் சிறிது நேரத்தில் பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள். வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது, அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது, வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை…

புத்தர்

புத்தர்

புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகச் சென்றுகொண்டிருந்தார். ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்த கிராமத்திலோ வசைமொழிகளுடன் அவமானப்படுத்தல்களும் அரங்கேறின. புத்தரோ அமைதியாய் கடந்து செல்ல முற்பட்டார். அவமானப் படுத்தியவர்களுக்கே அவமானமாகி விட்டது. “யோவ்.. இவ்ளோ திட்டறோமே, சூடு சொரணை ஏதும் உனக்கு இல்லையா?” என்று கடைசியில் கேட்டேவிட்டார்கள். புத்தர் சிரித்துக்கொண்டே.. “இதுக்கு முன் நான் சென்ற கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்து, புகழாரம் சூட்டினார்கள். எனக்கு எதுவுமே…

கவிஞர் கண்ணதாசன் சுயசரிதை

கவிஞர் கண்ணதாசன் சுயசரிதை

கவிஞர் கண்ணதாசன் சுயசரிதை எழுதுவதை கேள்விப்பட்ட ஒருவர் , நேராக அவரிடம் சென்றார். “காந்தி , நேரு போன்ற தலைவர்கள் எல்லாம் நாடு சுதந்திரம் அடைவதற்காக பாடுபட்டவர்கள் . அவர்கள் சுயசரிதை எழுதியது சரி. நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள் ‘ என்று கேட்டார் . இப்படி ஒரு கேள்வியை எதிர்கொள்ளும் எவரும் ஆத்திரமடைய வாய்ப்புண்டு. ஆனால் கண்ணதாசனோ மிக அமைதியாக , ‘ காந்தி , நேரு போன்றவர்கள் ஒருவர்…

மதம்!

மதம்!

ஸ்ரீ ரங்கத்திலே ஒரு யானை இருந்தது. 1918 -19 ல் ஒரு வழக்கு. யானைக்கு வடகலை நாமம் போடுவதா அல்லது தென்கலை நாமம் போடுவதா என்ற பிரச்சினை வைணவகளுக்குள் ஏற்பட்டது. அப்பொழுது நீதி மன்றங்களை கடந்து, பிரைவி கவுன்சில் வரைக்கும் வழக்குப் போனது. கவுன்சிலிலே விசாரித்து ஒரு உத்தரவு போட்டார்கள். யானைக்கு ஒரு மாதம் வடகலை நாமம், ஒரு மாதம் தென்கலை நாமம் போடலாம் என்று சமரச தீர்ப்பு கொடுக்கப்பட்டது.…

இது ஒரு காதல் கதை..

இது ஒரு காதல் கதை..

ஒரு காதல் ஜோடிக்கு, கடவுள் ஒரு நாற்காலியை அனுப்பி வைக்கிறார். அந்த நாற்காலியின் சிறப்பு அம்சம், அதில் அமர்ந்துக் கொண்டு பொய் சொன்னால் சிவப்பு விளக்கு எரியும். உண்மையைச் சொன்னால் பச்சை விளக்கு எரியும். காதலி தன் காதலனை அதில் அமரச் சொன்னாள். அவன் அமர்ந்துதும் ” நீ என்னை விரும்புகிறாயா? ” என்றுக் கேட்டாள்.அவன் “ஆம்” என்று பதில் அளித்தான். உடனே சிவப்பு விளக்கு எரிந்தது. காதலி உடனே,…

நாவினால் சுட்ட வடு….

நாவினால் சுட்ட வடு….

ஒரு முன் கோபக்காரன் ஒருவன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும். கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசிவிடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப்படுவான். நாளடைவில் அவனை சுற்றுவட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை. அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒருநாள் அவனிடம்…

குருவே சரணம்

குருவே சரணம்

குரு மரண படுக்கையில் இருந்தார்.. அருகில் அவரின் சீடன் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான். குரு மெல்ல அவனை அழைத்து, “ சிஷ்யா.. ஏன் கவலைப்படுகிறாய்? உனக்காக நான் எப்பொழும் இருப்பேன். கலக்கம் அடையாதே…” கலங்கிய கண்களுடன் சிஷ்யன் கூறினான்.. “குருதேவா… நீங்கள் கூறியபடி ஜாபம் தியானம் எல்லாம் செய்து வருகிறேன். ஆனால் ஆன்மீக உயர்நிலை அடையும் காலம் எப்பொழுது என தெரியவில்லை. எதுவரை எனது ஆன்மீக பயிற்சியை தொடர்வது.…

உயிரின் மதிப்பு!

உயிரின் மதிப்பு!

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜப்பான் நாட்டில் ஒரு பெண் ரயிலில் இருந்து இறங்கும் போது பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டார். சக பயனிகள் உடனடியாக ரயிலை மறு பக்கம் சாய்த்து அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.அந்த பெண்ணுக்கு சிறு காயம் கூட ஏற்படவில்லையாம். இதுவே நம்மூரில் ரோட்டில் யாராவது அடிபட்டு கிடந்தால் அல்லது ஷாப்பிங் காம்ப்ளாக்ஸில் இருந்து கீழே விழுந்தால் வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள். காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்…

தனித்தன்மை!

தனித்தன்மை!

“சிரமப்பட்டு நீ தேன் சேகரிக்கிறாய். ஆனால் மனிதர்கள் அதைத் திருடிச்செல்லும் போது உனக்கு வருத்தமாயில்லையா?” என்று பறவை தேனீயிடம் கேட்டது. “எனக்கு வருத்தமில்லை. மனிதர்கள் தேனைத்தான் திருடிச்செல்ல முடியும். தேனை உருவாக்கும் என் சக்தியை யாராலும் திருடிச்செல்ல முடியாது” என்றது தேனீ. தன்னுடைய தனித்தன்மையை நம்புபவர்கள் மற்றவர்கள் சதியில் மலைப்பதில்லை…

சொல்பவன் யாரென்றுதான் இந்த உலகம் பார்க்கிறது

சொல்பவன் யாரென்றுதான் இந்த உலகம் பார்க்கிறது

கவியரசர் கண்ணதாசன் ஒரு கல்லூரியில் கவி அரங்கம் ஒன்றில் கலந்து கொண்டார்.அவர் கவிதை வாசிக்க எழுந்ததுமே, பெருத்த உற்சாக ஆரவாரம் எழுந்தது. ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல், வாசித்து முடிந்து வெகுநேரம் வரை கரவொலிகள். அவை ஓய்ந்ததும் கண்ணதாசன் கூறினார்,“இதுவரை நான் வாசித்தது என் கவிதையே அல்ல. நான் எழுதிய கவிதையை என் மாணவருக்குக் கொடுத்து விட்டேன். அவரது கவிதையை வாங்க நான் வாசிக்கும்போது நீங்கள் வரிக்கு வரி கை…

அழகு!

அழகு!

மகாத்மா காந்தியும் தாகூரும் ஒரு முறை வெளியே சென்று வரலாம் என்று புறப்பட்டார்கள். காந்தி ஒரே கணத்தில் கிளம்பி விட்டார். ஆனால் தாகூர் சற்று தாமதமாக கிளம்பினார். ஏனெனில் அவர் கண்ணாடி பார்த்து தன் தலையைய் சீவிக் கொண்டு இருந்தார். தாகூரின் தாமதத்தைப் பார்த்து மகாத்மா இவ்வாறு கேட்டார், “உடற்பயிற்சிக்காக நடக்கச் செல்கிறோம் இதற்கெல்லாம் ஏன் தலைசீவிக் கொண்டிருக்கிறீர்கள்”! தாகூரின் பதில் “நான் எனக்காக என்னை அலங்கரித்துக் கொள்ளவில்லை. அடுத்தவர்…

உங்களுடைய ஆசையை சொல்லுங்கள்

உங்களுடைய ஆசையை சொல்லுங்கள்

ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர். மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு, “உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்” என்கிறது. மூவருக்கும் ஆச்சரியம்! உடனே கேஷியர் முந்திக்கொண்டு, “நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு…

அவசரப்படாதீர்கள்!

அவசரப்படாதீர்கள்!

அரசன் பரிவாரங்களுடன் சென்று கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த ஒரு கல் அவன் தலையில் பட்டு காயம் ஏற்பட்டது. வீரர்கள் உடனே நாலாபுறமும் சென்று ஒரு கிழவியைப் பிடித்து வந்தார்கள். கிழவி சொன்னாள்,”அரசே என் மகன் சாப்பிட்டு மூன்று நாள் ஆகிறது. அவனுக்காகப் பழம்பறிக்கக் கல்லை விட்டு எறிந்தேன். அது தவறி உங்கள் மேல் பட்டுவிட்டது. ”இதைக் கேட்ட அரசர் மந்திரியிடம் உடனே கிழவிக்கு ஆயிரம் காசுகள் கொடுக்கச் சொன்னார்.…

நூறு தந்திரங்கள்

நூறு தந்திரங்கள்

நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?” “எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை. அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது. நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது. நீதி:…

ஆசை நாய்குட்டி

ஆசை நாய்குட்டி

ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான். ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது. பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான். வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை. பிறகு ஒரு மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துப் போய் கவுன்சிலிங் செய்யச் சொன்னார்கள். அவரும் பல ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு கடைசியில் அவனிடம், ‘இதோ பார் இந்த சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படி அழுகிறாய்?…

Page 2 of 512345