1. காலம் மாறிப் போச்சு, காலம் மாறிப் போச்சுன்னு சொல்றோமே..மாறுனதும் மாறிக்கிட்டே இருக்கறதும் நாம தானே?
2. எனக்கு இந்த ட்ரெஸ் சின்னதா போயிருச்சுன்னு சொல்றோமே..ட்ரெஸ் எப்படிங்க சின்னதா போவும்? நாம தான வளர்ந்துட்டோம்.
3. முள்ளு குத்திருச்சின்னு சொல்றோமே.முள்ளு நம்மள தேடி வந்தாங்க குத்துச்சு?
4. பணம் காணாம போயிருச்சுன்னு சொல்றோமே.. என்னைகாது நான் பணத்தை தொலைச்சுட்டேன்னு சொல்றோமா?
5. புது செருப்பு கால் ல கடிச்சிருச்சின்னு சொல்றோமே.. செருப்புக்குத் தான் வாயே இல்லையே.அது எப்படிங்க கடிக்கும்?
6. fan ஓடுதுன்னு சொல்றோமே..அது எந்த பந்தயதுலங்க ஓடுது?
7. கரண்ட்(மின்சாரம்) போயிருச்சின்னு சொல்றோமே.. போனது பவர் (மின் சக்தி) தானுங்களே?
8. வலி உயிர் போவுதுன்னு சொல்றோமே..உயிர் போன அப்புறம் பேச முடியும்ங்களா?
-ஆதிரா