Home » Archives by category » கொறிக்க... » சிறு கதைகள்

மனைவி அமைவதெல்லாம்! (திருமண நாள் பதிவு)

மனைவி அமைவதெல்லாம்! (திருமண நாள் பதிவு)

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும்,பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும்,கற்பனைகளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நெறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது. கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில்…

திருமண அழைப்பிதழ் – சிறுகதை

திருமண அழைப்பிதழ் – சிறுகதை

வாசலில் பைக் நிறுத்தும் சத்தம் கேட்டது. ஐன்னல் வழியே எட்டிப் பார்த்தாள் கௌரி. அவளுடைய கணவன் ராமு தான். “பசங்களா.. ஓடுங்க.. ஓடுங்க.. அங்கிள் வந்தாச்சு..!” ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த அக்கம் பக்கத்து வீட்டு பிள்ளைகளை விரட்டிக் கொண்டிருந்தாள் கௌரி. ராமு உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்.…

சொந்தம் (மினி கதை)

சொந்தம் (மினி கதை)

காலம்: மாலை இடம்: வீடு சீதா: உங்கடை மேசையில இருந்து எழுதுங்கோ. இது என்ரை மேசை என்ர பேனை. இனிமேல் தயவுசெய்து என்னுடைய பொருட்களைத் தொடாதீங்கோ! சரி சரி வாங்கோ சாப்பிட…! இல்லை இல்லை அது என்ர சீற். நீங்கள் உங்கடையிலை போய் இருங்கோ. காலம்: இரவு – இடம்: படுக்கையறை சீதா: அது என்ரை தலையணை இங்க தாங்கோ.…

மாதவனின் ரசிகை!

மாதவனின் ரசிகை!

ப்ளஸ் டூ படிக்கும் என் செல்லப் பெண் ரம்யாவை நினைத்தால் கவலையாக இருக்கிறது எனக்கு. வீடு முழுக்க, பாத்ரூம் உள்பட அவளுடைய பேவரிட் சாக்லெட் ஹீரோ மாதவனின் ஆக்கிரமிப்புதான். எங்கே பார்த்தாலும் அவர் படம். நிமிடத்துக்கு நூறு தடவை அவர் பெயரை மேடி… மேடி… என்று ஜெபம் செய்வதும் சோ சுவீட் என்று அவர் படத்துக்கு முத்தமிடுவதும்… சே! அந்த ஏ.சி. டூ டயர் கம்பார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தபோது, திடீரென்று நேருக்கு…

திருமணம் ஆனால் திருந்திவிடுவான்!

திருமணம் ஆனால் திருந்திவிடுவான்!

என்னடா! கல்யாணத்துக்குப் பிறகு ஒழுங்காயிருப்பேல்லே? குடி, கூத்து எல்லாத்தையும் விட்டுடணும். ஆமா… சொல்லிப்புட்டேன்! என்றாள் சாவித்திரி. சரிம்மா! சத்தியமா இனி குடிக்க மாட்டேம்மா! உங்கப்பா செய்யாத சத்தியமாடா? முத நாளு ராத்திரி சூடம் கொளுத்திச் சத்தியம் பண்ணிட்டு, மறு நாளு காலையிலேயே தள்ளாடிட்டு வருவாரு. உன் பேச்சையெல்லாம் என்னால நம்ப முடியாதுடா! நீ இன்னிக்கே குடியை நிறுத்தற டாக்டர்கிட்ட வர்றே!…

மல்லிகைப்பூ சினேகா!

மல்லிகைப்பூ சினேகா!

அன்றைய ஷட்டிங் முடிந்து விட்டது. விட்டது. சரி, அப்போ நான் கிளம்பறேன். நாளைக்கும் இதே ஸீனோட தொடர்ச்சிதானே… வழக்கம்போல நானே மல்லிகைப் பூ வாங்கித் தலையில வெச்சிட்டு வந்துடறேன்! என்றார் சினேகா. சினேகாவின் போக்கு புரொடக்ஷன் மேனேஜருக்குப் புரியவில்லை. அதென்ன, மல்லிகைப் பூ மீது மட்டும் சினேகாவுக்கு அவ்வளவு அக்கறை… ஆர்வம்! அடுத்த நாள், சினேகா வீட்டுக்குப் போய்விட்டார் புரொடக்ஷன் மேனேஜர். கொஞ்ச நேரத்தில் ஒரு சின்னப் பெண் பூக்கூடையோடு…

ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு!

ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு!

எடுத்துக் கொள் இதயத்தை – என் மார்புக்குள் கை விட்டுத் தேடு திருடிக்கொள் என் சொத்தை – இது தீ இன்றி எரிகின்ற காடு… – சாதனா சர்க்கத்தின் குரல் இழைந்தது! இது முதலில் என் மகள் ஜனனி பாடுவதாக இருந்தது. ஜனனி பாடின டிராக்கைக் கேட்டு அசந்துட்டார் ரஹ்மான் சார். இப்போதைக்கு வேற யாரையும் வெச்சுப் பாட வைக்க வேணாம்னு சொல்லிட்டிருந்தார். எனக்கென்னவோ ஜனனி பாடினதையே ஓகே பண்ணிடுவார்னு…

எங்கே போனார் கனல் கண்ணன்?

எங்கே போனார் கனல் கண்ணன்?

ஒரு ஆளுக்காக மொத்த யூனிட்டுமே காத்திருக்கணுமா? எங்கே போயிட்டார் இந்த கனல் கண்ணன்? – டைரக்டர் பாபு சத்தம் போட்டுக் கொண்டு இருந்தபோதே கனல் கண்ணனின் கார் சீறிக்கொண்டு வந்து நின்றது. ஸாரி பாபு… கொஞ்சம் லேட் ஆயிடுச்சு! – அவர் சொல்லி முடிப்பதற்குள், அது எனக்குத் தெரியும். லைட்டுக்குத் தெரியாதே!  அது இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு மேல தாங்காது. ஷட்டிங் கேன்சல்! – எரிச்சலோடு சொன்னார் பாபு.…