Home » Archives by category » கொறிக்க... » தபூ சங்கர் பக்கம்

பொம்மிம்மா!

பொம்மிம்மா!

என் அம்மா கறந்து கொடுக்கும் பாலைச் சொம்பில் ஊற்றிக்கொண்டு வந்து, தினமும் உன் வீட்டு வாசல் முன் அதிகாலையில் நிற்பேன். அதை வாங்குவதற்கு உன் வீட்டில் எத்தனையோ வேலைக்காரிகள் இருந்தாலும் நீதான் வருவாய்! குளித்து முடித்த நீ நடந்து வந்து பால் சொம்பை வாங்கும் கணங்கள்தான் எனக்குத் தேவகணங்கள். என் ஒவ்வொரு நாளும் விடிவது அப்போதுதான்! பாத்திரத்தில் பாலை ஊற்றிவிட்டு, சொம்பைத் திருப்பித் தருவாய். அந்தச் சொம்பிலிருக்கும் மிச்சத் துளிகள்தான்…

கமுக்கமாய் காதலி!

கமுக்கமாய் காதலி!

சின்ன வயதில்… உன்னிடம் இருந்து எதையாவது நான் பிடுங்கினால், அழுதுகொண்டே ஓடிப்போய் என் அம்மாவிடம் புகார் சொல்வாயே, அது மாதிரி இப்போதும் நான் உன் இதயத்தைப் பிடுங்கிக்கொண்டதை என் அம்மாவிடம் சொல்வாயா? என்றேன். சேச்சே!  டேய் அவளோடதை அவளிடமே கொடுத்து விடு!? என்று அப்போ சொல்வது மாதிரியே இப்போதும் உன் அம்மா சொல்லி விட்டால்? என்றாய் அழகு காட்டி. கண்டிப்பா அப்படித்தான் சொல்வேன்! என்று திடீரென கதவுக்குப் பின்னாலிருந்து வெளியே…

நான் நலமில்லை… நீ?

நான் நலமில்லை… நீ?

பள்ளிப் படிப்பில் பாதியைக் கூட இதுவரை யாரும் தாண்டியிராத கிராமத்துக்காரன் நான். ?கல்லூரியில் படிக்கப் போகிறேன்? என்று சொன்னதும்,  ?வேணாம் கண்ணு! டவுனுப் பக்கம் படிக்கப் போனா, அங்கேயிருந்து திரும்பி வரும்போது ஒரு புள்ளையைக் கூட்டிட்டு வந்திருவாங்களாம்… வேண்டாம்டா!? என்று பதறினாள் என் அம்மா. எனக்குச் சிரிப்புதான் வந்தது. ?ஆமாமா! அங்க பட்டம் கொடுக்கும் போது, கூடவே ஒரு புள்ளையையும் கொடுப்பாங்களாக்கும்! அதெல்லாம் யாரோ ஒண்ணு, ரெண்டு பேரு பண்ற…

சீர் கொண்டு வா..!

சீர் கொண்டு வா..!

நீ அதிகாலை ஆற்றில் குளிக்க இறங்குகையில், ஐயோ… யாராவது ஆற்றைக் காப்பாற்றுங்கள்! ஒரு அழகுப் பேய் குளிக்க இறங்குகிறது… என்று கத்துவேன் நான் | கரையிலிருக்கும் மரத்தின் பின்னாலிருந்து! ஆற்றில் இறங்காமல், அடித்துப் பிடித்து நீ என்னிடம் ஓடிவந்து, கத்தாதே… என் தோழிகளெல்லாம் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று சிணுங்குவாய். ஆனால், உன் தோழிகளின் கேலியை நீ விரும்புகிறாய் என்பதை உன் சிணுங்கலில் இருக்கும் நடிப்பு காட்டிக் கொடுத்துவிடும்! உடனே…

வெட்கம்

வெட்கம்

வாய்க்கால் மேட்டில் நின்றிருந்த உனக்குத் தெரியாமல், பின்னால் வந்து சட்டென்று உன் கையைப் பிடித்தேன். பதறித் திரும்பிய நீ என்னைப் பார்த்ததும், ??அய்யோ… கையை விடுங்க. வெக்கமா இருக்கு? என்று நெளிந்தாய். வலிக்குதுனு சொல்லு! அதிலே நியாயம் இருக்கு… வெக்கமாத்தானே இருக்கு. அதுக்கு ஏன் கையை விடணும்? ஆமா, வெட்கப்படறது உனக்குப் பிடிக்காதா? என்றேன். ம்ம்ம்… வெக்கப்பட எந்தப் பொண்ணுக்காவது புடிக்காம இருக்குமா? என்றாய் வெட்கம் பொங்க. பிடிச்சிருக்குன்னா, ஏன்…

சிவபெருமானும் ஒரு சின்னப் பையனும்!

சிவபெருமானும் ஒரு சின்னப் பையனும்!

சிவபெருமானைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது! என்றேன் எரிச்சலுடன். பார்றா… கடைசியில் அவர் தலையிலும் கை வெச்சுட்டியா…ஆமா, அவர் மேல அப்படி என்ன உனக்குப் பொறாமை? என்றாய். தன் உடலில் பாதியை அவர் தன் மனைவிக்குக் கொடுத்த மாதிரி, என் உடலில் சரிபாதியை உனக்குக் கொடுக்க ஆசை. ஆனால், என்னால் முடியவில்லையே. அதான்! அதனாலென்ன… நீதான் உன் இதயத்தையே எனக்குக் கொடுத்துவிட்டாயே! என்ன பெரிய இதயம்… அது என் கையளவு…

திமிரழகி!

திமிரழகி!

மாலையில் நண்பனுடன் கடற்கரையில் அமர்ந்திருந்தேன். என்னுடன் படிக்கும் நீயும் இன்னொருத்தியும் அங்கே அதிசயமாக வர, உன்னுடன் வந்தவளைப் பெயர் சொல்லி அழைத் தேன். உண்மையில் உன் பெயர் சொல்லி அழைக் கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் நீயோ, பிரபஞ்ச அழகி என்பது போன்ற திமிருடன் திரிபவள். கல்லூரியில் சில நேரம் பேசுவாய்… சில நேரம் யார் நீ? என்பது போல் பார்த்துப் போவாய். இருவரும் அருகில் வந்தீர்கள். என் நண்பனை உங்களுக்கு…

மன்னிப்பும் அன்பளிப்பும்!

மன்னிப்பும் அன்பளிப்பும்!

நீயும் நானும் காதலும் யாரும் யாரிடமும் எதுவும் சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டு இருந்த காலத்தில்… நீ புதிய உடை அணிந்து வருவாய். ?புது டிரெஸ் நல்லா இருக்கா?? என்று கேட்கத் துடிக்கும் உன் உதடுகள். ஆனால், அதை உன் விழிகள் கேட்கும். உன் கொலுசுகளை அனுப்பிக் கேட்பாய். உன் வளையல்களைக் குலுக்கி விசாரிப்பாய். ஏன் உன் புதிய உடையையே சரசரக்கவிட்டுக் கேட்டுப் பார்ப்பாய். ஆனால், நானோ மாலை வரை மவுனமாகவே…

தேவதைகளின் தேவதை!

தேவதைகளின் தேவதை!

முதலிரவு… திருவிழாவுக்குப் பிறகு தேவதை நீ தூங்கிக்கொண்டு இருந்தாய். நான் உறங்க மறந்து உன்னையே பார்த்துக் கொண்டிருந்தேன்.  ஒரு பெண். அதுவும் என் பிரியத்துக்குரிய பெண் தூங்குவதை, அதுவும் என் படுக்கையில் தூங்குவதை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டே இருந்தேன். மணப்பெண்ணாக உன்னைப் பார்த்த போதோ, உனக்கு மாலை இடும்போதோ, தாலி கட்டும்போதோ,  முதல் முறையாக உன் விரல் பிடித்து தீயை வலம் வரும் போதோ அல்லது குடத்தில் மோதிரம் எடுக்கும் சடங்கில்…

விடுமுறை விரும்பாத வேலைக்காரன்

விடுமுறை விரும்பாத வேலைக்காரன்

இருட்டப் போகுது… நான் கிளம்பறேன் என்று எப்போதும் போல எழுந்தாய். இன்றாவது இருட்டும் வரை இரேன்! உன்னை ஒரே ஒரு முறை இருட்டில் பார்க்கணுமே! என்றேன். எதுக்கு? என்றாய் வேகமாக. உனக்கென்று ஒரு வெளிச்சம் இருக்கிறதோ என்று எனக்கு ரொம்ப நாளாய் ஒரு சந்தேகம். இன்றாவது உன்னை இருட்டில் பார்த்தால் தெரிந்துவிடும் சேதி! என்றேன். வெளிச்சமும் கிடையாது… கிளிச்சமும் கிடையாது! என்று ஓடிப் போனாய். அடுத்த நாள் காலை ஆற்றங்கரையில்…

மொத்தம் எத்தனை முத்தம்?

மொத்தம் எத்தனை முத்தம்?

நாளைக்கு உன் பர்த்டேயாச்சே! என்ன ஸ்வீட் வேணும் சொல்லு… நான் செய்து எடுத்துட்டு வர்றேன் என்றாய் ஆசையாய். முத்தம்! என்றேன் நான். ஹேய் என்று கைதட்டிச் சிரித்துக் கலாட்டா செய்த உன் தோழிகள் போடீ, போய் உன் உதடு நெறைய செஞ்சு எடுத்துட்டு வா! என்று கத்தினார்கள். தலையில் அடித்துக்கொண்டு ஓடிப்போனாய். அடுத்த நாள் நீ வகுப்புக்குள் நுழையும்போது, உன் தோழிகள் எல்லாம் உன் உதட்டையே உற்றுப் பார்த்தபடி கேட்டார்கள்……

சிறு தெய்வங்களும் ஒரு பெருந் தெய்வமும்!

சிறு தெய்வங்களும் ஒரு பெருந் தெய்வமும்!

கோயில் திருவிழாவன்று, கூத்தும் ஆரம்பித்துவிடும். ஊரில் இருக்கிற எல்லா கன்னிப் பெண்களும் வரிசையாக ஒரே நேரத்தில் பற்ற வைக்கிற பொங்கல் பானைகளில் எந்தப் பானை முதலில் பொங்குகிறதோ, அந்தப் பானைப் பொங்கல்தான் சாமிக்குப் படைக்கப்படும். இதற்குப் பின்னால் இன்னொரு நம்பிக்கையும் உண்டு. எந்தப் பெண்ணாவது எவன் மீதாவதுஆசை வைத்திருந்தால்… அவள் வைத்திருக்கும் பானை பொங்கினால்தான் அவள் ஆசை நிறைவேறும். இல்லை என்றால் அரோகராதான் என்பதே அது. இந்தக் கொடுமைக்குப் பயந்துதான்…

மனச வளத்தேன்… என் மனச வளத்தேன்…??

மனச வளத்தேன்… என் மனச வளத்தேன்…??

குழந்தையின் கையிலிருந்த மிட்டாயைப் பிடுங்கி ஒளித்துக்கொண்டு ?காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சு! என்று விளையாட்டு காட்டினாய் நீ. குழந்தையோ இல்லே..! என்றபடி உன்னையே சுற்றிச் சுற்றி வந்தது. நானும் ஒரு குழந்தைதான். கையில் மனதை வைத்துக்கொண்டு, நீ எப்போது பறிப்பாய் என்று உன்னையே சுற்றிச் சுற்றி வரும் குழந்தை. நீ என் மனதைப் பறித்துக் கொண்டு காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சு! என்றெல்லாம் சொல்ல வேண்டியதில்லை. நானும் இல்லே..! என்று உன்னைச் சுற்றி…

ஆ… அந்த மந்திரச்சொல்!

ஆ… அந்த மந்திரச்சொல்!

பத்தாம் வகுப்பு படிக்கும்போது, கேள்வி ஒன்றுக்குத் தவறாக பதில் சொன்ன என்னை, சரியாகப் பதில் சொன்ன உன்னைவிட்டுக் கொட்டச் சொன்னார் வாத்தியார். கொட்டுக்கள் புதிதல்ல… இதற்கு முன் கொட்டிய எல்லோருமே, எப்போதோ அவர்களுக்கு நான் செய்த இம்சைகளுக்கெல்லாம் பழி தீர்த்துக் கொள்வதுபோல, கோபத்தை என் தலையில் காட்டுவார்கள். ஆனால் நீயோ உன் கொட்டின் மூலம், உன் பிரியத்தைக் காட்டி விட்டாய். என்னை வலிக்காமல் கொட்டிய முதல் கை உன்னுடையது தான்.…

இனிமேல் எனக்குப் பரிசு தராதே!

இனிமேல் எனக்குப் பரிசு தராதே!

உனக்கென்று தனியாக தலையணை வைத்துக் கொள். என் தலையணையை எடுக்காதே! என்று நான் சொன்னதுதான் தாமதம்… உன் கண்ணில் நீர் முட்டிக் கொண்டுவிட்டது. ஏன் இப்படிப் பிரித்துப் பேசுகிறீர்கள்? என்றாய். பிரித்தெல்லாம் பேசவில்லை. உனக்கென்று நீ தனியாகத் தலையணை வைத்துக் கொண்டால், நீ ஊருக்குப் போயிருக்கும் நாட்களில், உன் தலையணையை நீ என்று நினைத்துக் கட்டிக்கொண்டு தூங்கலாம். அதற்குத்தான்! என்றேன். நீ தாவி வந்து என்னைக் கட்டிக்கொண்டு, ஒரு நிமிஷம்……

Page 1 of 212