Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இருட்டப் போகுது… நான் கிளம்பறேன் என்று எப்போதும் போல எழுந்தாய். இன்றாவது இருட்டும் வரை இரேன்! உன்னை ஒரே ஒரு முறை இருட்டில் பார்க்கணுமே! என்றேன். எதுக்கு? என்றாய் வேகமாக. உனக்கென்று ஒரு வெளிச்சம் இருக்கிறதோ என்று எனக்கு ரொம்ப நாளாய் ஒரு சந்தேகம். இன்றாவது உன்னை இருட்டில் பார்த்தால் தெரிந்துவிடும் சேதி! என்றேன். வெளிச்சமும் கிடையாது… கிளிச்சமும் கிடையாது! என்று ஓடிப் போனாய். அடுத்த நாள் காலை ஆற்றங்கரையில்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
நாளைக்கு உன் பர்த்டேயாச்சே! என்ன ஸ்வீட் வேணும் சொல்லு… நான் செய்து எடுத்துட்டு வர்றேன் என்றாய் ஆசையாய். முத்தம்! என்றேன் நான். ஹேய் என்று கைதட்டிச் சிரித்துக் கலாட்டா செய்த உன் தோழிகள் போடீ, போய் உன் உதடு நெறைய செஞ்சு எடுத்துட்டு வா! என்று கத்தினார்கள். தலையில் அடித்துக்கொண்டு ஓடிப்போனாய். அடுத்த நாள் நீ வகுப்புக்குள் நுழையும்போது, உன் தோழிகள் எல்லாம் உன் உதட்டையே உற்றுப் பார்த்தபடி கேட்டார்கள்……
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கோயில் திருவிழாவன்று, கூத்தும் ஆரம்பித்துவிடும். ஊரில் இருக்கிற எல்லா கன்னிப் பெண்களும் வரிசையாக ஒரே நேரத்தில் பற்ற வைக்கிற பொங்கல் பானைகளில் எந்தப் பானை முதலில் பொங்குகிறதோ, அந்தப் பானைப் பொங்கல்தான் சாமிக்குப் படைக்கப்படும். இதற்குப் பின்னால் இன்னொரு நம்பிக்கையும் உண்டு. எந்தப் பெண்ணாவது எவன் மீதாவதுஆசை வைத்திருந்தால்… அவள் வைத்திருக்கும் பானை பொங்கினால்தான் அவள் ஆசை நிறைவேறும். இல்லை என்றால் அரோகராதான் என்பதே அது. இந்தக் கொடுமைக்குப் பயந்துதான்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
குழந்தையின் கையிலிருந்த மிட்டாயைப் பிடுங்கி ஒளித்துக்கொண்டு ?காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சு! என்று விளையாட்டு காட்டினாய் நீ. குழந்தையோ இல்லே..! என்றபடி உன்னையே சுற்றிச் சுற்றி வந்தது. நானும் ஒரு குழந்தைதான். கையில் மனதை வைத்துக்கொண்டு, நீ எப்போது பறிப்பாய் என்று உன்னையே சுற்றிச் சுற்றி வரும் குழந்தை. நீ என் மனதைப் பறித்துக் கொண்டு காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சு! என்றெல்லாம் சொல்ல வேண்டியதில்லை. நானும் இல்லே..! என்று உன்னைச் சுற்றி…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பத்தாம் வகுப்பு படிக்கும்போது, கேள்வி ஒன்றுக்குத் தவறாக பதில் சொன்ன என்னை, சரியாகப் பதில் சொன்ன உன்னைவிட்டுக் கொட்டச் சொன்னார் வாத்தியார். கொட்டுக்கள் புதிதல்ல… இதற்கு முன் கொட்டிய எல்லோருமே, எப்போதோ அவர்களுக்கு நான் செய்த இம்சைகளுக்கெல்லாம் பழி தீர்த்துக் கொள்வதுபோல, கோபத்தை என் தலையில் காட்டுவார்கள். ஆனால் நீயோ உன் கொட்டின் மூலம், உன் பிரியத்தைக் காட்டி விட்டாய். என்னை வலிக்காமல் கொட்டிய முதல் கை உன்னுடையது தான்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
உனக்கென்று தனியாக தலையணை வைத்துக் கொள். என் தலையணையை எடுக்காதே! என்று நான் சொன்னதுதான் தாமதம்… உன் கண்ணில் நீர் முட்டிக் கொண்டுவிட்டது. ஏன் இப்படிப் பிரித்துப் பேசுகிறீர்கள்? என்றாய். பிரித்தெல்லாம் பேசவில்லை. உனக்கென்று நீ தனியாகத் தலையணை வைத்துக் கொண்டால், நீ ஊருக்குப் போயிருக்கும் நாட்களில், உன் தலையணையை நீ என்று நினைத்துக் கட்டிக்கொண்டு தூங்கலாம். அதற்குத்தான்! என்றேன். நீ தாவி வந்து என்னைக் கட்டிக்கொண்டு, ஒரு நிமிஷம்……
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
உன் தோளில் கிடக் கிற கர்வத்தில் வகுப்பறையின் வாசல்படியையே தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு, உன்னை உள்ளே அழைத்து வந்தது உன் துப்பட்டா. நீ செய்யும் அட்டூழியம் இப்படி என்றால், உன்னைக் காதலிக்க ஆரம் பித்த பிறகு நான் செய்யும் அட்டூழியங்களைச் சொல்லி மாளாது. நீ வந்ததும் வராததுமாக என் நண்பர்கள் உன்னிடம் ஓடி வந்து அம்மா தாயே… ரெண்டு நாளா லீவுங்கறதால, ?உங்கிட்ட பேச முடியாத வாயால் யார்கிட்டயும் பேசமுடியாது?னு…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
உன்னை முதலில் சும்மாதான் பார்த்தேன்! அப்புறம் சும்மா சும்மா பார்க்க ஆரம்பித்தேன். நான் பார்க்கிறேன் என்பதற்காக நீயும் பார்க்க ஆரம்பித்த பிறகு, உன்னைக் காதலித்தால் என்னவென்று தோன்ற ஆரம்பித்தது. ஆனால், உன்னைக் காதலிக்கலாமா வேண்டாமா என்பதை என் அப்பாவைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். ஏன் என்றால் என் அப்பா என் மிகச் சிறந்த நண்பன். வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அப்பா… நான் காதலிக்கலாம்னு இருக்கேன்ப்பா என்றேன். அய்யோ பாவம்! என்றார்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஏழு வருடங்கள் கழித்து ஊருக்கு வருகிறேன். இப்போது நீ எப்படி இருப்பாயோ? என் அத்தை மகள் நீ. அப்பா இல்லாதவளாகையால் உன் அம்மாவோடு சின்ன வயதிலிருந்தே எங்கள் வீட்டில்தான் இருக்கிறாய். மாமா மாமா என்று என்மீது உயிரையே வைத்திருப்பாய். பத்தொன்பது வயதில் வேலைக்காக நான் வெளிநாடு கிளம்புகையில்… அழுதபடியே சென்னை வரை வந்து என்னை வழியனுப்பியபோது, உனக்கு வயது பதின்மூன்று. ஊரிலிருந்த காலங்களில்… நான் கடைத்தெருவுக்குப் போயிருந்தால்கூட, வாசலிலேயே காத்திருந்து…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
நாமிருவரும் சின்னஞ்சிறு வயதில், அம்மா & அப்பா விளையாட்டு விளையாடிய அதே மாந்தோப்பில்தான், நீ உன் அம்மாவின் சேலையைக் கிழித்து முதல் தாவணியும், நான் என் அப்பாவின் வேட்டியை மடித்து முதல் வேட்டியும் கட்டிக்கொண்டு சந்தித்தோம் | பொங்கி வழிந்த கூச்சத்துடன் ஒரு திருவிழா நாளில். குனிந்த தலை நிமிராமல் நீ அப்போது சொன்னாய்… இனிமே உன்னை டா போட்டுக் கூப்பிடமாட்டேன்! ஏன்? மாட்டேன்னா… மாட்டேன்! அப்போ இனிமே நானும்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
என் அழகை நான் ஆராதிப்பதைவிட, நீ அதிகம் ஆராதிக்கிறாயே… ஏன்? என்றாய். உன் அழகால் உனக்கென்ன பயன்? அதன் பயனை எல்லாம் அனுபவிப்பவன் நான்தானே! என்றேன். என் அழகால் உனக்கு என்ன பயன்?? அடுத்த ஜென்மத்தில் நீ ஆணாகப் பிறந்து, ஓர் அழகியைக் காதலி. அப்போது புரியும்! இந்த ஜென்மத்தில், புரியும்படி கொஞ்சம் சொல்லேன்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
நீ குளித்து ஓடி வரும் நீரில் பூத்துக் குலுங்கும் சின்னப் பூந்தோட்டம்தான் ஊரிலேயே அழகான இடம். திருநாட்களிலும், திருவிழாத் தருணங்களிலும் மட்டும் குடும்பத்தோடு கோயிலுக்கு வந்துபோகிற அம்மன் நீ. கோயிலில் சற்று நேரம் நீ உட்கார்ந்துவிட்டு எழுந்து போகும் இடத்தை மூன்று முறை சுற்றி வந்து… வெகுநேரம் அங்கேயே கிடக்கிற நாய்க்குட்டிகள் நாங்கள். ஊரில் தேர்த் திருவிழா என்றால் எங்களைப் பிடிக்க முடியாது. அன்றுதான் நாள் முழுவதும் உன்னைப் பார்க்கலாம்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
நம் காதலை உங்கள் குடும்பம் ஏற்றுக்கொண்டுவிட்ட ரம்மியமான காலமது! உங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போக என்னையும் அழைத்திருந்தார் உன் தந்தை. உன்னை மாதிரியே உன் குலதெய்வம்கூட அழகாகத்தான் இருக்கிறது! என்று உன் காதில் சொன்னபடி, குலதெய்வத்துக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுக் கோயிலைச் சுற்றுகையில், உன் தந்தை என்னைப் பார்த்து, Ԕஉங்கள் குலதெய்வம் எது? என்று கேட்டார். நான் உன்னைக் காட்டி, இதோ! என்றேன். உன் குடும்பத்தின் கேலிச் சிரிப்பொலிக்கு நடுவே…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
மார்கழி மாதக் கோலத்துக்குச் சூட்டுவதற்காக என் அம்மா உன் வீட்டில் பூசணிப் பூ வாங்கிவரச் சொல்லுவார். நான் வாங்க வரும்போது, நீ என் அம்மாவுக்கு இரண்டு பூசணிப் பூக்களும், எனக்கு ஒரு புன்னகைப் பூவும் தருவாய். என்னிடமிருந்து படிப்பதற்காக வாங்கிப் போகும் வார இதழ்களில் இருக்கும் ஆடைக்குறைவான பெண்களுக்கு ஆடை வரைந்து திருப்பிக் கொடுப்பாய். பொங்கலன்று… நாங்கள் கட்டிக் கொண்டிருந்த புது வீட்டைப் பார்க்க வருமாறு உன்னை அழைத்தேன். நீயும்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
எப்போதும்போல நேற்றிரவு உன் கனவுக்காகத் தூங்கியபடி காத்திருந்தேன். ஆனால், நீ வருவதற்கு முன், எப்படியோ என் கனவுக்குள் நுழைந்துவிட்ட கடவுள், என்னைப் பார்த்து, குழந்தாய்… உனக்கு என்ன வேண்டும்? என்று அவருக்கே உரிய தோரணையுடன் கேட்டார். எனக்கோ கோபம் தலைக்கேறி, யார் நீ? உன்னை யார் என் கனவுக்குள் அனுமதித்தது? உன்னிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டாம். எனக்கு என்ன வேண்டும் என்பதை என்னைக் கேட்காமலே எனக்கு வாரி வழங்குகிற தேவதை…