கடவுளே நான் இதில் ஜெயித்து விட்டால் உனக்கு பொங்கல் வைக்கிறேன்.
எனக்கு மட்டும் கேட்டது கிடைத்து விட்டால் உனக்கு கிடா வெட்டுகிறேன்.
வருவோரெல்லாம் வியாபாரம் பேசுகிறார்கள்
கடவுள் தீர்மானித்து விட்டார்.
நாளைக்கே கோவில் வாசலில் எழுதி ஒட்டிவிடவேண்டும்
“வெற்றி விற்பனைக்கு அல்ல” என்று..!
-Kali Muthu