Home » கொறிக்க... » எம்.ஜி.ஆர், கவிஞர் வாலி.. உலகம் சுற்றும் வாலிபன்…

எம்.ஜி.ஆர், கவிஞர் வாலி.. உலகம் சுற்றும் வாலிபன்…

mgr-vaaliகவிஞர் வாலியும், எம்.ஜி.ஆரும் உலகம் சுற்றும் வாலிபன் என்ற படம் சம்பந்தமான பாடல் கம்போஸிங்ல இருந்தப்ப,

வாலி ஏதோ சொன்னதுல எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்துடுச்சு.

‘‘இந்த மாதிரி பேசினேன்னா,

உன் பேரு படத்தோட டைட்டில்ல வராமப் பண்ணிடுவேன்’’ அப்படின்னாரு.

‘‘நீங்க நினைச்சா எந்தப் படத்தோட டைட்டில்லயும் என் பேர் வராம பண்ணிட முடியும் அண்ணே,

ஆனா இந்த படத்தோட டைட்டில்ல என் பேர் வராம உங்களால படத்தை ரிலீஸ் பண்ணவே முடியாது’’ அப்படின்னாரு.

எம்.ஜி.ஆர். வியப்பா,

‘‘ஏன் அப்படிச் சொல்றே?’’ன்னு கேக்கவும்,

‘‘என் பேர் டைட்டில்ல வராம உங்க படம் வந்தா,

‘உலகம் சுற்றும் பன்’ அப்படின்னு அசிங்கமா இருக்கும் அண்ணே!’’ன்னு,

வாலி சொல்லவும்,

கோபத்தை மறந்த குபீர்னு

சிரிச்சுட்டாரு எம்.ஜி.ஆர்..

Leave a Reply