மகாத்மா காந்தியும் தாகூரும் ஒரு முறை வெளியே சென்று வரலாம் என்று புறப்பட்டார்கள். காந்தி ஒரே கணத்தில் கிளம்பி விட்டார். ஆனால் தாகூர் சற்று தாமதமாக கிளம்பினார். ஏனெனில் அவர் கண்ணாடி பார்த்து தன் தலையைய் சீவிக் கொண்டு இருந்தார். தாகூரின் தாமதத்தைப் பார்த்து மகாத்மா இவ்வாறு கேட்டார், “உடற்பயிற்சிக்காக நடக்கச் செல்கிறோம் இதற்கெல்லாம் ஏன் தலைசீவிக் கொண்டிருக்கிறீர்கள்”!
தாகூரின் பதில் “நான் எனக்காக என்னை அலங்கரித்துக் கொள்ளவில்லை. அடுத்தவர் கண்களுக்கு நான் அசிங்கமானவனாகத் தெரிந்து விடக் கூடாது; பிறர் என்னைக்கண்டு அருவருப்பு உணர்ச்சி அடைந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த அலங்காரம்”.
உதாரணம்:
படிப்பதற்கு வசதி இல்லாமல் கரித்துண்டில் எழுதிப் பார்த்து பின்னாளில் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியான ‘அடிமைகளின் சூரியன்’ அபிரஹாம் லிங்கனின் நிச்சயக்கப்பட்ட காதல் திருமணம் கூட குறிப்பிட்டதொரு தினத்தில் நடைபெறமால் போனதற்கு கூட இந்த “அழகு” ஒரு காரணம் என்றே கூறலாம்.
லிங்கனின் காதலி மேரி டாட்டிற்கு பிடிக்காத விஷயங்கள் லிங்கனிடம் :
லிங்கனின் நடை, உடை மற்றும் பழக்கவழக்கங்கள்.
கோடை காலமா? லிங்கன் கோட்டோ, டையோ அணியமாட்டார். ‘இந்த வேக்காட்ல இது வேறா?’ என்ற கேள்வி.
சட்டையில் பட்டன் அறுந்து விட்டதா? உடனே வேறு பட்டனைத் தேடி ஓட்ட மாட்டார். அதை சரி செய்ய அவருக்கு ஒரு பின்னோ, ஊசியோ அல்லது சில சமயம் ஒரு முள்ளை சொருகிக்கொண்டு அப்படியே சென்று விடுவார்.
எப்பொழுதும் சவரம் செய்யப்படாத முகம். சரியாக வாரப்படாத கேஷம்.
இளைஞர்களே, சற்றே உற்று கவனியுங்கள். 160 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த லிங்கனுக்கே இதனால் பிரிவு என்றால் இன்று நம்மைப் பற்றி நாம் எவ்வளவு யோசிக்க வேண்டும். அழகு நிரந்தரமானதல்ல ஆனால் நம்மை பார்த்து மற்றவர்கள் அருவருக்காதபடி சுத்தமாக இருக்க முயற்சிப்போம்.