ஒரு காதல் ஜோடிக்கு, கடவுள் ஒரு நாற்காலியை அனுப்பி வைக்கிறார். அந்த நாற்காலியின் சிறப்பு அம்சம், அதில் அமர்ந்துக் கொண்டு பொய் சொன்னால் சிவப்பு விளக்கு எரியும். உண்மையைச் சொன்னால் பச்சை விளக்கு எரியும்.
காதலி தன் காதலனை அதில் அமரச் சொன்னாள். அவன் அமர்ந்துதும் ” நீ என்னை விரும்புகிறாயா? ” என்றுக் கேட்டாள்.அவன் “ஆம்” என்று பதில் அளித்தான். உடனே சிவப்பு விளக்கு எரிந்தது.
காதலி உடனே, நீ பதற வேண்டாம். கடவுள் நாற்காலியில் ஏதோ தவறு செய்து விட்டார் போலும்.அதனால் தான் சிவப்பு விளக்கு எரிகிறது. நாம் மீண்டும் முயற்சிக்கலாம் என்றாள்.
மீண்டும் “நீ என்னை விரும்புகிறாயா? ” என்றுக் கேட்டாள். அவனும் ஆம் என்று பதில் சொன்னான். இம்முறை பச்சை விளக்கு எரிந்தது.
நாற்காலியில் எந்த வித தவறும் இல்லை. காதலன் முதலில் சொன்னது பொய் தான்.இத்தனை நாட்களாக அவன் அவளை உண்மையாக விரும்பவில்லை.
அவள் அவன் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறாள் என்பதை கண்ணால் பார்த்த அந்த நொடியிலிருந்து தான் அவளை உண்மையாய் நேசிக்க ஆரம்பித்தான்.
அதனால் தான் இரண்டாம் முறை பச்சை விளக்கு எரிந்தது.
நீதி : நீங்கள் உங்கள் காதல் மீது கொண்ட நம்பிக்கை வெளிப்பட்டால், ஒரு தலை காதல் கூட ஒரு நாள் வெல்லும்.
நன்றி : ஆதிரா