Home » குட்டிக்கதைகள் » எல்லாம் எனக்குத் தெரியும்

எல்லாம் எனக்குத் தெரியும்

குருவிடம் வந்தான் மாணவன். வரும்போதே அவனிடம் அலட்சியமும் பெருமையும் இருந்தது.

‘‘குருவே இன்றோடு உங்களிடம் படிக்க வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன’’ என்றான் மாணவன்.

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம் குருவே. நான் எல்லாவற்றையும் கற்றுவிட்டேன். இனி தனியாக ஒரு குருகுலம் ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்.’’

‘‘அப்படியா? இப்போது எல்லாம் உனக்குத் தெரிந்துவிட்டதா?’’ அமைதியாய் கேட்டார் குரு.

‘‘எல்லாமே எனக்கு இப்போது தெரி

‘‘சரி, ஒரே ஒரு கேள்

‘‘ஆமாம்’’

‘‘குடையை செருப்புக்கு வலப்புறம் வைத்தாயா? இடப்புறம் வைத்தாயா?’’

மாணவன் யோசித்தான். குருவிடமிருந்து சட்டென்று வந்த இந்தக் கேள்விக்கு மாணவனிடம் பதிலில்லை.

‘‘எல்லாம் எனக்குத் தெரியும் என்று

சொல்லும்போதே, நீ சரியாகப் பாடம் கற்கவில்லை என்று தெரிந்துவிட்டது’’ என்றார் குரு.

Leave a Reply