Home » கொறிக்க... » சிறு கதைகள் » ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு!

ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு!

எடுத்துக் கொள் இதயத்தை – என்
மார்புக்குள் கை விட்டுத் தேடு
திருடிக்கொள் என் சொத்தை – இது
தீ இன்றி எரிகின்ற காடு… – சாதனா சர்க்கத்தின் குரல் இழைந்தது!

இது முதலில் என் மகள் ஜனனி பாடுவதாக இருந்தது. ஜனனி பாடின டிராக்கைக் கேட்டு அசந்துட்டார் ரஹ்மான் சார். இப்போதைக்கு வேற யாரையும் வெச்சுப் பாட வைக்க வேணாம்னு சொல்லிட்டிருந்தார்.

எனக்கென்னவோ ஜனனி பாடினதையே ஓகே பண்ணிடுவார்னு தோணுது! என்று ரஹ்மானின் உதவியாளர் சொன்னதைக் கேட்டு, வானத்தில் பறந்தேன். ஆனால், அதே பாட்டு இப்போது சாதனா சர்க்கம் குரலில்! என்ன ஆச்சு?

ரஹ்மானின் உதவி யாளரிடம் விசாரித்தேன். குரல் ரொம்ப நல்லா இருக்கு. நிச்சயம் ஹிட் ஆகிடும். ஆனா, இது கொஞ்சம் செக்ஸியான பாட்டா இருக்கு. அதுக்கப் புறம் பன்னிரண்டு வயசு ஜனனிக்கு இது மாதிரியான பாட்டாவே கொடுத்து செக்ஸி பாடகினு முத்திரை குத்திடுவாங்க. அதனால வேற ஒரு நல்ல பாட்டு வர்றப்போ ஜனனியைப் பயன்படுத்திக்க லாம்னு சார் சொல்லிட்டார்! என்றார் அவர்.

ரஹ்மானின் உயர்ந்த மனதைக் கண்டு நெகிழ்ந்தேன்.

ஜி.ரமேஷ்-

Leave a Reply