Home » கொறிக்க... » வாழ்க நலமுடன் » ஆயுளை அதிகரிக்கும் உடற்பயிற்சி

ஆயுளை அதிகரிக்கும் உடற்பயிற்சி

அளவான உணவு, தேவையான உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள் போன்றவை ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியமானவை. இன்றைய இளைய தலைமுறையினரிடம் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. உடல் நலனில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வதிலும், முறையான உணவு பழக்க வழக்கங்களிலும் ஆர்வம் காட்டுகின்றனர். மற்றவர்கள் இதில் கவனம் செலுத்துவதில்லை.

இதனால் அவர்களது நடுத்தர வயதில் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இதை தவிர்க்க உதவும் வழிமுறைகள் குறித்து ஐரோப்பிய நாடுகளில் ஆய்வுகள் நடைபெற்றது.
அப்போது நடுத்தர வயதில் இருந்தாலும் ஒருவர் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தால் சீரான உடல் நலத்தை பெற முடியும் என்று தெரிய வந்தது. இளம் வயதில் உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலும் நடுத்தர வயதில் ஒருவர் தவறாமல் உடற்பயிற்சி செய்து முறையான உணவு கட்டுப்பாட்டுடன் இருந்தால் அவருக்கு நோய் தாக்குதல் வெகுவாக குறையும் என்றும் அவரது ஆயுள் அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது என்றும் தெரியவந்தது.

Leave a Reply