Home » கொறிக்க... » சினிமா..சினிமா... » 6கோடி தமிழர்கள்-8கோடி சம்பளம் கேட்கும் ஹீரோக்கள்!

6கோடி தமிழர்கள்-8கோடி சம்பளம் கேட்கும் ஹீரோக்கள்!

பூஜா கிரியேஷன்ஸ் சார்பில் சி.நாகராஜன் தயாரிக்கும் படம் நாள் நட்சத்திரம். புதுமுகங்கள் சஞ்ஜெய்.எஸ்., கிருஷ்ணாஸ்ரீ ஜோடி. சக்தி சி.என்.ஆர். இயக்கம். ராஜ்பவன் இசை. இப்படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

மனோரமா வெளியிட இயக்குனர் பேரரசு பெற்றார். பிறகு மனோரமா பேசியதாவது:

கோடி கோடியாக வாரி இறைத்து படங்கள் எடுக்கும் இந்நாளில் சிறிய பட்ஜெட்டில் இப்படத்தை முடித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மக்கள் தொகை 6 கோடிதான். ஆனால் ஹீரோக்கள் ரூ.7 கோடி, 8 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்கிறார்கள். அதை எப்படி கொடுக்க முடியும் என்று தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள்.

இதனால்தான் புதுமுகங்களை ஊக்குவிக்க வேண்டும் என்கிறேன். பட்ஜெட்டில் தயாராகும் படங்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.

அப்போதுதான் சிறுபட்ஜெட் படங்கள் வரும். ஒருமுறை சரோஜாதேவி என்னிடம் பேசும்போது, என்னடி சினிமாவில் கோடி கோடியாய் சம்பளம் கேட்கிறாங்க. கேட்கவே பயமா இருக்கே என்றார்.

எம்.ஜி.ஆர் கடைசியாக வாங்கிய அதிக பட்ச சம்பளம் ரூ.11 லட்சம்தான். சிவாஜி ரூ.6 லட்சம் தான் வாங்கினார்.

நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன், என்னை யாரும் மிரட்ட முடியாது.

Leave a Reply