பாழடைந்த பங்களா வாசலில் நின்றிருந்த அவளை விசித்திரமான வடிவத்தில் இருந்த மிருகம் ஒன்று துரத்துவதுபோல கனவு கண்டாள். தினந்தோறும் இந்தக் கனவு தொடர்ந்து வர, அவள் பயந்து நடுங்கினாள். நிம்மதி இன்றித் தவித்தாள். அன்றைக்கும் அதே கனவு. அதே பங்களா, அதே மிருகம் துரத்த, மூச்சு இரைக்க ஓடினாள். ஒரு மூலையில் அவள்ஒடுங்கிக் கொள்ள, அந்த மிருகம் அவளுக்கு அருகில் வந்து உற்றுப் பார்த்தது.
பயத்தில் உறைந்துபோன அவள் அந்த மிருகத் திடம் கேட்டாள்… ”யார் நீ? உனக்கு என்ன வேண்டும்? என்னை எதற்காகத் துரத்துகிறாய்? இப்போது என்னை என்ன செய்யப் போகிறாய்?”
அந்த மிருகம் அவளிடம் அமைதியாகச் சொன்னது…”எனக்கெப்படித் தெரியும்? இது உன் கனவு!”
– ஜி.லட்சுமிபதி, சென்னை.