Home » கொறிக்க... » வாழ்க நலமுடன் » சிகரெட் பிடிப்பதனால் நன்மையா?

சிகரெட் பிடிப்பதனால் நன்மையா?

பேச்சாளர் ஒருத்தர், சிகரெட் பிடிப்பதனால், ஏராளமான நன்மைகள் உண்டாகும்னு பேச்சைத் தொடங்கினார்.

உடனே கூட்டத்திலிருந்த ஒருத்தர், சிகரெட் பிடிப்பதனால் நன்மையா? என்னென்ன நன்மைகள்?னு கிண்டலா கேட்டாரு.

சிகரெட் பிடிப்பவனை நாய் கடிக்காது. அவன் வீட்டிற்குத் திருடன் வர மாட்டான். அவனுக்கு முதுமை வராதுன்னாரு பேச்சாளர்.

நீங்கள் சொல்வது நம்பும்படி இல்லையேன்னு கேட்டாரு அவர்.

நான் சொல்வது உண்மைதான். தொடர்ந்து சிகரெட் பிடிப்பவனால், இரண்டு கால்களால் நடக்க முடியாது. கையில் தடி ஒன்றைப் பிடித்துக் கொண்டுதான் நடப்பான்.கையில் தடி வைத்திருப்பதினால், அவன் அருகில் நாய் வராது.

இரவில் அவன் எப்பொழுதும் லொக், லொக் என்று இருமிக் கொண்டிருப்பான். எப்பொழுதும் சத்தம் கேட்டுக் கொண்டிருப்பதால், அந்த வீட்டில் திருடன் நுழைய மாட்டான்.

சிகரெட் பிடிப்பவன் இளமையிலேயே இறந்து விடுவான். அதனால், அவனுக்கு முதுமையே வராதுன்னு கூட்டம் கலகலப்படைய விளக்கினார் பேச்சாளர்.

Leave a Reply