Home » கொறிக்க... » எண்ணிரண்டு பதினாறு வயது!

எண்ணிரண்டு பதினாறு வயது!

எண்ணிரண்டு பதினாறு வயது அவன்
கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது…

என்று கவியரசர் கண்ணதாசன் பாடலை எழுதிக்கொடுத்தார்.
தயாரிப்பாளர் கவியரசரிடம் ‘இன்றைக்கு உள்ள எந்தக் கதாநாயகிக்கு பதினாறு வயது…எல்லாக் கதாநாயகிகளும் முப்பது வயதுக்குமேல் ஆனவர்கள் ஆச்சே!’ என்றார்.

கவியரசர் சிரித்துக்கொண்டே நானும் அதைத்தான் எழுதியிருக்கிறேன் என்றார்.
தயாரிப்பாளர் வியப்புடன் பார்த்தார்.

கவியரசர், ‘எண்ணி, இரண்டு பதினாறு வயது என்றால் முப்பத்திரண்டு வயது ஆகிறது அல்லவா!’ என்றார்.
தயாரிப்பாளர் அசந்து போனார்.

Leave a Reply