Home » கொறிக்க... » வாழ்க நலமுடன் » உப்பை குறைக்கவும்

உப்பை குறைக்கவும்

தினமும் நாம் சாப்பிடும் உணவில் 3 கிராம் அளவிற்கு உப்பை குறைத்து வந்தால், பிற்காலத்தில் இதய நோய் தாக்குதலில் இருந்து தப்பலாம். இதய பிரச்சினை ஏற்படுவதற்கான காரணங்களில் முக்கியமானது உயர் ரத்த அழுத்த பிரச்சினை. நாம் சாப்பிடும் உணவில் உப்பு அதிகமாக இருப்பதும் உயர் ரத்த அழுத்த பிரச்சினை ஏற்படுவதற்கு காரணம். உயர் ரத்த அழுத்த பிரச்சினையால் ஏற்கனவே உலகம் முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் சில வருடங்கள் கழித்து 25 வயதிற்கு மேற்பட்டவர்களில் மூன்றில் ஒரு நபருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

உயர் ரத்த அழுத்த பிரச்சினைக்கு சிகிச்சை பெற அதிக பணம் செலவாகிறது. இதய பிரச்சினை ஏற்பட்டால் ஆகும் செலவுகளை நடுத்தர குடும்பங்களால் தாங்கவே முடியாது. எனவே இதயப் பிரச்சினை வராமல் தடுப்பதே மிகச்சிறந்த வழியாக கருதப்படுகிறது. இதற்கு சாப்பாட்டில் உப்பைக் குறைப்பதும் உதவியாக இருக்கும்.

புகைப்பிடிப்பதை நிறுத்துவது, வேறு எந்த வழியிலும் புகையிலை பொருட்களை உபயோகிக்காமல் இருப்பது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது போன்ற செயல்பாடுகளின் மூலமும் ரத்த அழுத்த பிரச்சினையில் இருந்து தப்பலாம்.

Leave a Reply