மூட்டை முடிச்சு
பெட்டி படுக்கை
பங்கர் பொம்பர்
சோகம் சோர்வு
சுதந்திரமாய்
சுவாசிக்கவாவது…..
முடியாது….
மூச்சை இழுத்தால்
மூக்கை அரிக்கும்
நச்சுக்காற்று
வாடி வதங்கி
கூனிக்குறுகி
உயிரறுந்து போகும்
மானிடங்கள்
நடைபிணங்களாய்
நகர்ந்தபடியே….!
தொ(ல்)லைக்காட்சியில்
சுற்றுலா விளம்பரம்பார்த்த
ஜேர்மன் நண்பன்
இலங்கை
ஆகா அதுவல்லவோ
சொர்க்கபூமி என்றான்
நானும்
ஆமாம்
விரைவில் சொர்க்கம் போக
அதுவல்லவோ
பூமி
என்றேன்.
ரமேஷ் வவுனியன்.