செல்போன்கள் மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்பாதவர்கள் இருக்க முடியாது. இலவச எஸ்.எம்.எஸ் சேவை வழங்கப்படுவதால், எதற்கெடுத்தாலும் எஸ்.எம்.எஸ் அனுப்பி கொண்டு இருப்பது அறிவுத்திறனை குறைக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். `இதோ வந்து கொண்டிருக்கிறேன்’, `நிற்கிறேன்’, `ஓடுகிறேன்’ என எதற்கெடுத்தாலும் எஸ்.எம்.எஸ் அனுப்புபவர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
முக்கியமான வேலைகளின் இருக்கும்போது எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொண்டிருப்பதால், பணியில் கவனம் செலுத்த முடியாது போகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு விபத்துகளும் ஏற்படுகிறது. உதாரணமாக நடந்து கொண்டே எஸ்.எம்.எஸ் அனுப்பும் போது, கவனம் அதிலேயே இருப்பதால் சாலை ஓரம் உள்ள கம்பத்தில் மோதி விபத்து ஏற்படும். சிலர் வாகனங்களினால் மோதப்படுகிறார்கள்.
அதாவது எஸ்.எம்.எஸ் அனுப்பும் போது நமது அறிவுத்திறன் குறைந்து, சுற்றுப்புற ஆபத்துகளைப் பற்றிய கவனம் இல்லாது போவதே இதற்கு காரணம். எனவே எஸ்.எம்.எஸ் அனுப்புபவர்கள் எச்சரிக்கையாகவும், அறிவுக் கூர்மையுடனும் நடந்து கொள்வது ஆபத்திலிருந்து காக்கும்.