மப்பும் மந்தாரமுமாக வானம் இருந்தால் மழை நிச்சயம் வரும் நண்பர்களே!
வாசலில் வரவேற்கத் தயாராக இருந்தால், காதல் எந்த நேரமும் காலிங் பெல் அடிக்கும்!
வீக்காக இருக்கும் விக்கெட்டுகளை வீழ்த்த வேகப் பந்து தேவையில்லை… சுழல் பந்துகளே போதும். பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்… விக்கெட்டுகளைக் கண்டுபிடிப்பது எப்படி?
1. ‘இரவு கவிதை… கவிதை இரவு… கனவில் நிலவு… நிலவில் கனவு… மாதிரி பார்ட்டி எப்போதும் ஏதாவது ஃபீலிங் பாடல்களை முணுமுணுக்கிறாரா? பாடும்போது நாலு கார்த்திக், ஏழு ஹரிணி போல முகபாவங்களுடன் பாடலை ‘ரிவிட்’ எடுக்கிறாரா?
‘நேத்து மிட்நைட் எஸ்.சி.வி&யில இளையராஜா ஹிட்ஸ் போட்டான். ‘ஈரமான ரோஜாவே’ & ப்ச்… என்னா பாட்டு?’ என்பது போன்ற டயலாக்ஸ் அடிக்கடி விடுகிறாரா? பார்ட்டி ஃபீலிங் ஃபில்பான்ஸி.
பொறுமையாக உம் கொட்டி, பளிச்சென அப்ளிகேஷன் தட்டினால் காதல் பழம் கனிந்து ஜூஸ§க்குத் தயாராகிவிடும்.
2. ‘நேத்து நீ என் கனவில் வந்தப்பா… ஏம்ப்பா நேர்ல பயமுறுத்தறது பத்தாதுனு இப்பல் லாம் கனவுலயும் பயமுறுத்தறியே!’ (‘உனை நான் உனை நான் உனை நான்’ என்பதுதான் சொல்ல விரும்பும் செய்தி).
‘காலையில கோயிலுக்கு போனப்போ உனக்காக ப்ரே பண்ணிகிட்டேம்ப்பா’ (‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே!’ என்பது மேட்டர்). இதுபோன்ற டயலாக்குகளை பேச ஆரம்பிக்கிறாரா? பார்ட்டி குயில் பாட்டு கேட்க ஆரம்பிச்சாச்சு என்று அர்த்தம்.
சமயம் பார்த்து ‘நீதானா அந்தக் குயில்!’ பாடலாம்.
3. சீனியர்களிடம் சதா காதல் நியூஸ் கேட்டு அலைகிறாரா? ‘அக்கா நீங்க லவ் மேரேஜ்தானே? லவ் பண்ணும்போது இருந்த மாதிரியே இப்பவும் இருக்கீங் களாக்கா?’, ‘லவ்ல தோத்துட்டா ரொம்ப கஷ்டமாயிருக்குமா அண்ணே?’ என்றெல்லாம் சீனியர்களிடம் சரமாரியாக காதல் அட்வைஸ் வாங்கு கிறாரா?
ஏதாவது ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போனால் அவருடைய அப்பத்தாவிடம், ‘உங்க காலத்துலயெல்லாம் லவ் உண்டா பாட்டிம்மா?’ என ஆரம்பித்து லவ் ரிசர்ச் நடத்துகிறாரா?
பார்ட்டி மனசில் காதல் தானியங்கள் சிதறிக் கிடக்கின்றன. பக்குனு கொத்திக் கோங்க!
4. காதல் பற்றி ஏரியாவில் பேச்சு ஆரம்பித்தாலே பார்ட்டி முகத்தில் கலர் பேப்பர் சுற்றிய சீரியல் லைட்டுகள் எரியும். பேப்பர் புரட்டினால் கூட, எட்டாம் பக்கத்தில் கட்டம் கட்டி வெளியாகியிருக்கும் ‘காதல் ஜோடி தற்கொலை’ மேட்டரை வரி விடாமல் படிப்பார். ‘ச்சே ஏம்பா இப்படி?’ என கொஞ்ச நேரம் அப்செட்டில் இருப்பார்.
‘இந்த ‘காதல்’ படம் பார்த்ததும் ஷாக்காகிட்டேன்’ என தலை உதறுகிறாரா? ‘ஆமா, பரத்தும் சந்தியாவும் லவ் பண்றாங்களாமே’ என கிசுகிசுக்குப் பறக்கிறாரா?
‘லவ் ஆல்’ என கேம் ஆட கில்லி ரெடியாகிறார். நேரம் பார்த்து தட்டுங்கள். காதல் கதவுகள் படக்கெனத் திறக்க லாம்!
5. ‘கமல் & ஸ்ரீதேவிக்கு அப்புறம் சூர்யா & ஜோதிகா ஜோடிதான் சூப்பர்ல… அவங்க லவ் பண்றாங்களாமே. சிவகுமார் ஒப்புக்க மாட்டேங்கறாரா? பாவம்ப்பா. அவங்க மேரேஜ் பண்ணிக்கணும்’ & என்ற ரேஞ்சில் திடுதிப்பென்று அமெரிக்கா&இராக் பிரச்னை ரேஞ்சுக்கு சூர்யா&ஜோதிகா வுக்காகக் கவலைப்படுவார்.
கலகலப்பான ஆள் சட்டென்று மௌன ராகம் பாடுவார். ‘எல்லோரும் சுத்தி இருந்தாலும் என்னவோ தனியா இருக்கற மாதிரியே ஃபீலிங்கா இருக்கு. வீடே பிடிக்கலைப்பா. எங்கேயாவது போயிடலாம்போல இருக்கு’ என்றெல்லாம் குவார்ட்டர் அடிக்காமலேயே குழறுகிறாரா?
‘எனக்கே எனக்கா’ என காதல் தேடி அலைகிறது மீன். அலைபாயும் மனசை வலை வீசிப் பிடியுங்கள்!
6. அதுவரை எஸ்.எம்.எஸ்&ஸில் அரதப்பழசான சர்தார்ஜி ஜோக்ஸ் அனுப்பிய கோழி ‘விரல்களின் நடுவில் ஏன் இடைவெளி விட்டான் இறைவன்? இன்னொரு இதயம் கொண்டு இருபது விரல்களாகக் கோக்கத்தான்!’ என்றெல்லாம் கவிதை மழை பொழிகிறாரா?
‘டிபனை ஸ்கிப் பண்ணக்கூடாது. அல்சர் வந்துரும்’ என்றெல்லாம் அடிக்கடி அக்கறை மெஸேஜ்கள் வருகின்றனவா..?
காதல் ஐஸ்க்ரீம் உருக ஆரம்பித்திருக்கிறது. வேஸ்ட் பண்ணிடாம டேஸ்ட் இட்மா!
க்ளைமேட் பார்த்து அப்ளிகேஷ னைத் தட்டிவிடுங்க… கண்டிப்பா காதல் மழை பொழியும்!
-லவ்வர்பாய்-