Home » குட்டிக்கதைகள் » இவையெல்லாம் மாறிவிடும்!

இவையெல்லாம் மாறிவிடும்!

‘‘குருவே, என்னால் வாழ முடியாது. வாழ்க்கையே துன்பமாய் மாறிவிட்டது’’ என்றான் ஒருவன்.

‘‘அப்படியா?’’ அமைதியாகக் கேட்டார் குரு.

‘‘ஆமாம். முன்பு என் வாழ்க்கை இனிமையாக இருந்தது. எந்தக் கஷ்டமும் இல்லை. நிம்மதியாக இருந்தேன். இப்போது நான் எது செய்தாலும் தப்பாகவே முடிகிறது. வியாபாரத்தில் நஷ்டம். குடும்பத்தில் சந்தோஷம் இல்லை. வாழ்க்கையே சோகமாகிவிட்டது’’.

‘‘இவையெல்லாம் மாறிவிடும்’’ அமைதியாகச் சொன்னார் குரு.

மாதங்கள் போயின. குரு முன் மீண்டும் வந்து நின்றான் அவன்.

‘‘குருவே, உங்களைச் சந்தித்த பிறகு வாழ்க்கையே மாறிவிட்டது. இப்போது சந்தோஷமாயிருக்கிறேன். பிஸினஸ் நன்றாகப் போகிறது. நிறைய லாபம் வருகிறது. குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்று மிகுந்த உற்சாகத்துடன் சொன்னான் அவன்.

குரு அவனை அமைதியாகப் பார்த்தார்.

‘‘இவையெல்லாம் மாறிவிடும்’’ என்றார்.

Leave a Reply