* எதிர்கொள்ளாமல் எதுவும் வெற்றி பெறுவதில்லை.
* தோல்வி என்பது மீண்டும் முயற்சிக்க நல்ல வாய்ப்பு.
* பொருளை தவிர வேறு செல்வங்கள் கிடைக்கப் பெறாதவனும் ஏழைதான்.
* இதயக் கண்ணாடி உடையும் போதும் அதன் சில்லுகள் பிறர் காலை கீறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* வாதாட பலருக்கு தெரியும்; உரையாட சிலருக்குத்தான் தெரியும்.
* அமைதி மட்டுமல்ல புயலும் சேர்ந்ததுதான் வாழ்க்கை.
எம்.லூர்து ராஜ், சவேரியார்பாளையம்-