காலத்தின் மாறுதலால்
கடந்து போன
வாழ்க்கைச்சக்கரம்
கசப்பான பாடத்தினை
கருமையாய்க் கக்க…..
வாழ்க்கையைத் தொலைத்து விட்டு
வாழ்வதற்காய்
இருப்பிடம் தேடி – நாம்
இன்று ஐரோப்பிய வீதிகளில்
அவனியில் கேவலமானவர்களாய்……
சிதைந்து போன – எமது
தேசத்திலிருந்து
வரும் சேதிகள்
தாய் மண்
ஆதிக்கப் பேய்களால்
ஆக்கிரமிக்கப்பட்டதால்
அகதிகளாய்
இருப்பிடம் தேடி – நாம்
இன்று ஐரோப்பிய
அடிமைகளாய்…..
வவுனியன்-