Home » கொறிக்க... » பெண்ணுலகம் » அழகே உன் தூக்கமும் அழகு தான்…!

அழகே உன் தூக்கமும் அழகு தான்…!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தில் உள்ள அழகு எப்படிப்பட்டது என்பதை உணர்த்தக்கூடியது அழகான கண்கள் தான்.

கறுப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறாயே என்று சில பெண்களை பார்த்துச் சொல்வார்கள். அப்படி, `களை`யாக இருக்கிறாயே என்று பிறரை சொல்ல வைப்பது சாட்சாத் இந்த கண்களே தான்!

ஒரு நாள் தூக்கம் இல்லை என்றால் முகமும் வாடிப்போய் இருக்கும்; கண்களும் சோர்ந்து போய் இருக்கும். தூக்கத்தைத் தேடித் துடிக்கும் கண்களின் அந்த நேர போராட்டத்தை ஆராய்ச்சி செய்தால் பல புத்தகங்களே எழுதிவிடலாம் என்பது போல் தோன்றும்.

சிலர் படுக்கையில் படுத்த மாத்திரத்தி லேயே தூங்கிவிடுவார்கள். இன்னும் சில ருக்கு என்ன தான் புரண்டு புரண்டு படுத் தாலும் தூக்கம் மட்டும் உடனே வராது. தூக்கத்தோடு பெரும் போராட்டம் நடத்திக் கொண்டே, அவர்களை அறியாமலேயே தூங்கிவிடுவார்கள்.

உண்மையைச் சொல்லப்போனால் தூக்கம் தான் மனிதனுக்கு இலவசமாக கிடைக்கும் அருமையான மருந்து. பெட்டி நிறைய பணம் இருந்து என்ன பயன்? தூக்கம் வர மாட்டேங்குதே? என்று சிலர் புலம்புவதை நீங்கள் கேட்டிருக்கலாம். இதில் இருந்தே, தூக்கம் ஒருவருக்கு எந்த அளவுக்கு தேவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

காதலர்கள் தங்களுக்குள் முதன் முதலில் காதலை பரிமாறிக் கொள்வது இந்த கண்களால் தான். வாய் பேசாத பல வார்த்தைகளை இந்த சின்னக் கண்கள் எளிதில் பேசி விடும். கண்களால் தூது சொல்ல மாட்டாயா? என்று காதலன் காதலியை பார்த்து ஏங்குவதும் இதனால் தான்.

ஒரு மனிதன் தன் பரிபூரணமான வாழ்நாளில் சுமார் 23 ஆண்டுகளை தூக்கத்திலேயே செலவிடுகிறான். உடலும், மூளையும் வளர்வதற்கு, புதுப்பித்துக் கொள்வதற்கு அவகாசம் தருவது இந்த தூக்கம் தான்.

பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம் தூங்குகிறது. 3-5 வயது வரையிலான குழந்தை 11 மணி நேரம் தூங்குகிறது. போகப்போக தூங்கும் நேரம் குறை கிறது. காரணம், மூளையானது தேவை இல்லாத விஷயங்களையும் இழுத்துப் போட்டு யோசிப்பது தான். சிலர் பணம்… பணம்… என்று அலைந்தே தூக்கத்தை தொலைத்து விடுகிறார்கள்.

நாளடைவில் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்ற சராசரி அளவை எட்டுகிறார்கள். சிலர் உழைப்பின் மீதுள்ள அதீத காதலால் 6-7 மணி நேரம் தான் தூங்குகிறார்கள். இந்த தூக்கம் கூட வராமல் தவிப்பவர்களும் உண்டு.

தூக்கத்தை இரு வகையாக பிரிக்கிறார்கள். ரெம் மற்றும் நான் ரெம் தான் அவை. இதில், ரெம் வகை தூக்கத்தின்போது வரும் கனவுகள் தான் பளிச்சென்று ஞாபகத்தில் இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

மேலும், ரெம் தூக்கத்தின்போது தான் அதிகம் கனவுகள் தோன்றுகின்றனவாம். அப்போது, விழிப்புடன் இருக்கும் மூளை, தன்னிடம் இருந்து செல்லும் எல்லா தகவல் வழித்தடங் களும் சரியாக இருக்கின்றனவா என்று சரி பார்த்து கொள்கிறதாம்.

எதிலும் ஆக்டிவ் ஆக உள்ளவர்களுக்கு தான் இந்த ரெம் வகை தூக்கம் அதிக நேரம் நீடிக்குமாம். கனவுகளும் அதிகம் வருமாம். மந்தபுத்தி உள்ளவர் என்றால் இவ்வகை தூக்கம் குறைவு தானாம். அதனால் கனவுகளும் குறைவாகத் தான் வருமாம்.

தூக்கம் என்பது இயற்கையானது. என்ன தான் தூக்கம் வராமல் இழுத்துப் பிடித்துக் கொண்டு இருந்தாலும், ஏதாவது ஒரு கட்டத்தில் கண்டிப்பாக தூக்கம் வந்தே தீரும். ஒரு நாள் அல்லது 2 நாள் தூங்காமல் இருக்க முயற்சிக்கலாம். அதையும் தாண்டினால், தூக்கம் உங்களை அறியாமலேயே தானே வந்து விடும். இது இயற்கையானது. இதை மாற்ற முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தூக்கம் என்பதை எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் பெண்கள் தான் அழகாக தூங்குகிறார்கள் என்று புதிதாக ஒரு ஆராய்ச்சி நடத்தி கண்டுபிடித்து இருக்கிறார்கள். மென்மையான அணுகுமுறை தான் இதற்கு காரணம் என்றும் தீர்வு சொல்லி இருக் கிறார்கள் அந்த ஆராய்ச்சியாளர்கள்.

மென்மையாக நடந்து கொள்ளாமல் கொஞ்சம் அதிகமாக ஆண் தன்மையுடன் நடந்து கொள்ளும் பெண்களுக்கு இந்த அழகான தூக்கம் கிடைப்பது இல்லையாம். ஆண்களிலும் சாப்ட் கேரக்டர் உள்ளவர்கள் தான் அழகாக தூங்குகிறார்கள். எக்குதப்பாக அலைபாயும் மனம் கொண்டவர்கள், எப்போதும் எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பவர் கள். என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே கண்டபடி உருண்டு புரண்டு தூங்குகிறார்களாம்.

அதனால் அழகான தூக்கம் பெண்களுக்கு மாத்திரமே என்று சர்டிபிகேட் கொடுக்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு.

உங்கள் தூக்கம் எப்படி?

Leave a Reply