காதலும் பிசினஸ்தான். எமோஷனல் பிசினஸ். தொடர்ந்து ஒழுங்காகஇ முறையாகத் தொடர வேண்டும். அப்போதுதான் லாபம் பார்க்க முடியும்.
காதலர்கள்-தங்களுக்குள் பர்ஃபெக்ஷன் எதிர்பார்க்கக் கூடாது. குறை-நிறைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கறார் பேர்வழிகள் காதலிக்கவே கூடாது. காதலன் உயர் அதிகாரியும் அல்ல, காதலி அவருக்குக் கீழ் வேலை பார்ப்பவளும் அல்ல.
தான் ஒரு காதலன் என்கிற நினைப்பு மாறி, தான் ஓர் ஆண் என்கிற எண்ணம் வரும்போதெல்லாம் சிக்கல் தலைதூக்க ஆரம்பித்துவிடும்.
காதலுக்கு ஒவ்வொரு நிமிஷமும் போஷாக்கு தேவை. இல்லையெனில் காதலர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்… காதல் சவலைப் பிள்ளையாகிவிடும்!