Home » ஜோக்ஸ் » பிடிப்பு !

பிடிப்பு !

புலம் பெயர்ந்து நாடுகள் மாறி அகதிகள்போல் வாழப் பிடிக்கும்!

சோசல் காசை எடுத்துக் கொண்டு களவாய் வேலை செய்யப் பிடிக்கும்!

கோலா ரின்னில விஸ்கி கலந்து பார்க்கில் இருந்து அடிக்கப் பிடிக்கும்!

விழாக்களின்போது வாசலில் நின்று கும்பலாக பேசப் பிடிக்கும்!

புடிக்கும் சீட்டில் முதல் சீட்டை எடுத்துக்கொண்டு மாறப் பிடிக்கும்!

ஒருவரைப்பற்றி ஒருவரிடம் புறங் கூறி பேசப் பிடிக்கும்!

அன்னதானம் என்று சொன்னால் எல்லா கோவிலும் போகப் பிடிக்கும்!

கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு படித்தவன் போல நடிக்கப் பிடிக்கும்!

தமிழோடு ஆங்கிலம் கலந்து அரை குறை இங்கிலிஸ் கதைக்க பிடிக்கும்!

சின்னத்திரைகள் FREE என்றால் ஜோராய் இருந்து பார்க்கப் பிடிக்கும்!

வட்டிக்கு விட்டு வட்டி வாங்கி சீட்டு போட்டு சேர்க்கப் பிடிக்கும்!

சேர்ந்த காசில் HOLYDAY VISIT>  பல நாடு போகப் பிடிக்கும்!

வாங்கிய கடனை கொடுத்தவன் கேட்டால் தவனை சொல்லி மாறப் பிடிக்கும்!

நம்மவர் இனத்தை வீதியில் கண்டால் நைஸா மாறி நழுவப் பிடிக்கும்!

ஊடகங்கள் ரொக்கம் கேட்டால் கேட்பதை பார்ப்பதை நிறுத்தப் பிடிக்கும்!

எம்மவர் ஆக்கம் விசர் என்று பலரிடம் சொல்லி கதைக்கப் பிடிக்கும்!

டென்சன் டென்சன் என்று சொல்லி இரண்டு வேலை செய்யப் பிடிக்கும்!

தொலை பேசி இலவசம் என்றால் தொல்லை கொடுத்து பேசப் பிடிக்கும்!

PART TIME
வேலை செய்து கொண்டு குருடுடு FULL TIME ஆக படிக்கப் பிடிக்கும்!

PART TIME
வேலையை குருடுடு FULL TIME ஆக்கி பாதியில் படிப்பை நிறுத்தப் பிடிக்கும்!

சுய நலமாய் வாழ்ந்து கொண்டு பொது நல கதைகள் பேசப் பிடிக்கும்!

பக்தி பக்தி என்று சொல்லி பகட்டு காட்டி வாழப் பிடிக்கும்!

மற்றவர் குறைகளை பெரிது படுத்தி எனது குறையை மறைக்கப் பிடிக்கும்!

தாய் நாட்டுப்பற்று கதைத்துக் கொண்டு நஸனாலிட்டி எடுக்கப் பிடிக்கும்!

நஸனாலிட்டி எடுத்த பின்பு நாடுகள் பல போகப் பிடிக்கும்!

மலிந்த விலையில் பொருட்கள் தேடி பல கடை ஏறி இறங்கப் பிடிக்கும்!

தெரியாததை தெரிந்தது போல நடித்துக் கொண்டு கதைக்கப் பிடிக்கும்!

எனக்கு பிடித்தது பிடிக்கும் என்றால் பிடியாதவரையும் எனக்கு பிடிக்கும்!

பிடிக்கும்படி பிடிக்காததை பிடித்தபடி சொன்னால்

பிடிக்காதவருக்கும் பிடிக்காதது பிடிக்கும்!

-ரவி செல்லததுரை, பாசல் சுவிஸ-

Leave a Reply