Home » ஜோக்ஸ் » கொஞ்சம் சிரிங்க…

கொஞ்சம் சிரிங்க…

“படகில போகும்போதுதான் அவகிட்ட ` ஐ லவ் யூ’ சொல்லணுமா?”

“அப்பத்தான எங்காதல் முழுகிப் போகாது”
 
ரா.சு.லீலாவிஜய், மதுரை-

“என் மனைவிக்குப் பிடிச்சதையெல்லாம் நான் வாங்கியே குடுத்துடுவேன்”
 
“அப்படியா! நா என் மனைவிக்கு பிடிச்சதையெல்லாம் செஞ்சே குடுத்திடுவேன்!”

வைகை. ஆறுமுகம், வழுதூர்-

(வாசலில் கழுதைகள் வந்து நிற்பதைக் கண்டு)

“அடியேய்! வாசல்ல உங்க சொந்தக்காரங்க எல்லாம் வந்து நிக்கிறாங்க?”
 
“உங்களைக் கட்டிக்கிட்டதால் வந்த சொந்தம்தாதே அது நீங்களே என்னான்னு கேளுங்க!”

ஆர்.குற்றாலலிங்கம், வெள்ளைக்கோட்டை-
 
“அன்பே! கல்யாணத்துக்குப் பிறகும் கூட, இதே மாதிரி அன்போட என்கிட்ட நடந்துக்கிவீங்களா?”
“கண்டிப்பா! ஏன் இப்படி திடீர்னு கேட்குறே?”

“இல்லை. எங்கப்பா பார்த்த மாப்பிள்ளைக்கு கழுத்த நீட்டறதுக்குத்தான்”
 
ஜி.சுந்தராஜன், திருத்தங்கல்-
 
“இவருதான் இப்ப, எங்க வீட்டுக்கு `கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்மெஷின்’ எல்லாம்”

“அட எதுக்கு இப்படி சுத்திவளைச்சு சொல்றீங்க. வீட்டோட மாப்பிள்ளையா இருக்காருன்னு சொல்ல வேண்டியதுதான?”
 
எஸ்.சோமசுந்தரம், அண்ணலக்ரஹாரம்-

Leave a Reply