1. நம்ம அம்மாவெல்லாம் சிக்கு கோலம் போட்டாங்க.
நமக்கு ரங்கோலி தான் போடத் தெரியும்.சிக்கு கோலம் நம்மகிட்ட சிக்கித் தவிக்கும்.
2. நம்ம அம்மாவெல்லாம் கை முறுக்கு சுட்டு இருப்பாங்க.நமக்கு கேரட் அல்வாவும், குலோப் ஜாமும் தான் செய்யத் தெரியும்.
3. நம்ம அம்மாவெல்லாம் அம்மில அரைச்சு குழம்பு வச்சுருப்பாங்க. நமக்கு சக்தி , ஆச்சி ன்னு மாசாலா தூள கண்ணுல காட்டுனாத்தான் குழம்பு வைக்கவே தெரியும்.
4. நம்ம அம்மாவெல்லாம் சேலைல 3 அல்லது 4 மடிப்பு வச்சுத் தான் கட்டுவாங்க.நாம 5 இல்லை 6 வச்சுத் தான் கட்டுவோம்.
5. நம்ம அம்மாவெல்லாம் மஞ்சள் பூசி குங்குமம் வச்சாங்க. நாம மஞ்ச பூசுனாலும் மூஞ்சுல ஒட்டாத கஸ்தூரி மஞ்சளைத் தான் பூசுவோம்.ஸ்டிக்கர் பொட்டு தான் வைப்போம்.
6. நம்ம அம்மாவெல்லாம் பட்டையா தான் கொலுசு போடுவாங்க. நமக்கு மெலிசா உள்ள கொலுசு தான் புடிக்கும். அதிலையும் நடக்கறப்ப சத்தம் அதிகம் வரக்கூடாது.
7. நம்ம அம்மாவெல்லாம் மூக்குத்தி போட்டு இருப்பாங்க. நமக்கு அதுலாம் புடிக்காது.ஆனா காதுல 4 ஓட்ட போட்டு 4 கம்மல் மாட்ட புடிக்கும்.
8. நம்ம அம்மாவெல்லாம், எத்தனை பேருக்கு சமைக்க சொன்னாலும் சரியா அளவுபாத்து சமைப்பாங்க. நமக்கும் அளவுக்கும் ரொம்ப தூரம். ஒன்னு பத்தாம சமைப்போம் இல்லன்னா பத்து நாளைக்கு வர மாறி சேத்து சமைப்போம்.
# உண்மையா, இல்லையா பொண்ணுங்களா சொல்லுங்க??
-ஆதிரா