Home » கொறிக்க... » தெரிஞ்சுக்கோங்க…

தெரிஞ்சுக்கோங்க…

மருத்துவ உலகின் தந்தை என்று ஹிப்போகிரடஸை சொல்கிறார்கள். இவர் வாழ்ந்த காலத்தில் தலைவலி, ஜுரம், சொறி என்று எந்த உடல் சார்ந்த பிரச்சினைகள் வந்தாலும், அது கடவுள் தந்த தண்டனை என்ற (மூட) நம்பிக்கை மக்கள் மத்தியில் கொஞ்சம் அதிக மாகவே இருந்தது. அப்படிப்பட்ட காலத்தில், அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என்று கூறிய ஹிப்போகிரடஸ், சில நோய்களுக்காக தானே சிகிச்சையும் அளிக்க ஆரம் பித்தார். அதனால் தான் அவரை மருத்துவ உலகின் தந்தை என்று அழைக்கிறார்கள்.

உங்களில் பலர் லைட் ஹவுசை (கலங்கரை விளக்கம்) பார்த்திருக்கலாம். நேரில் பார்க் காதவர்கள் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். முதன் முதலில் கி.மு.280ல் எகிப்திய மன்னர்கள் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தில் லைட் ஹவுஸ் ஒன்றை ஏற் படுத்தினார்கள். இதன் உயரம் 400 அடி. அப்போதெல்லாம் மின்சாரம் கிடையாது அல் லவா? அதனால் லைட் ஹவுசின் உச்சியில் விறகை எரித்து வெளிச்சம் ஏற்படுத்தி னார்கள். 16ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான லைட் ஹவுஸ்களை துறை முகங்களில் கட்டின. அப்போது வெளிச்சம் தந்தவை எண்ணெய் விளக்குகள் மற்றும் ராட்சத மெழுகுவர்த்திகள். இங்கிலாந்து நாட்டினர் தான் முதன் முதலில் லைட் ஹவுஸ் வெளிச்சத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்தினார்கள்.

***

ஐஸ்கிரீம் சாப்பிடாதவர்களே இருக்க முடியாது. இப்போது வருகிற ஐஸ்கிரீம்களை பார்த்த மாத்திரத்திலேயே அவைகளை சப்பி சாப்பிட வேண்டும் என்பதுபோல் தோன்று கிறது அல்லவா? இதே ஐஸ்கிரீமை முதல் முதலில் ருசித்த பெருமைக்கு உரியவர்கள் ரோமானிய அரச குடும்பத்தினரே! இதை அவர்கள் தயார் செய்ய படாத பாடுபட்டார்கள். தேவையான ஐஸ் கட்டிக்காக அடிமைகளை குதிரையில் மலை உச்சிக்கு அனுப்பி விடு வார்கள். அங்கே படிந்து கிடக்கும் பனிப்பாறைகளை வெட்டி எடுத்துக்கொண்டு வேக வேகமாக வர வேண்டும். ஐஸ் கட்டிகள் வருவதற்குள், அரண்மனையில் பழங்களையும், தேனையும் கலந்து ஒருவித ஜாம் செய்து வைத்திருப்பார்கள். அதனுடன் பனிக் கட்டி களை போட்டு, ஒரு கலக்கு கலக்கி ஐஸ்கிரீம் போன்று செய்து சாப்பிடுவார்கள். மேலும், இதனுடன் ஒயினையும் சேர்த்து உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள்.

***

பூக்களை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதில் இருந்து வரும் வாசம் தான் இதற்கு காரணம். மலரில் இருந்து வரும் வாசத்திற்கு காரணம் அதில் உள்ள எண்ணெய்ச் சத்துகள் தான். சில சூழ்நிலைகளில் இந்த எண்ணெய்ச் சத்துகள் தாமா கவே ஆவியாகின்றன. அதனால் தான் நாம் பூக்களின் வாசத்தை உணர முடிகிறது. ஒரு மலரின் வாசனை அதன் எண்ணெய்ச் சத்தை அடிப்படையாக கொண்டு காணப்படு கிறது. பூக்களுக்கு பூக்கள் வாசனை வேறுபடுகிறதே, அது இதனால் தான்.

***

குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்கிறது அறிவியல். இல்லை… இல்லை… கடவுள் தான் படைத்தார் என்கிறது ஆன்மிகம். அறிவியல் கூறுகிற குரங்கே இல்லாமல் இருந்திருந்தால் மனிதன் தோன்றியிருக்க முடியுமா என்ற கேள்வி சிலருக்கு எழலாம். குரங்கு தோன்றாவிட்டாலும் பரிணாம வளர்ச்சியின் காரணமாக மனிதன் தோன்றி இருக்க முடியும் என்று அடித்து கூறுகிறது அறிவியல். அதாவது, 65 மில்லியன் ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த `இனீக்வாலிஸ்’ என்ற டைனோஸரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மனிதன் தோன்றி இருப்பான் என்று கூறியிருக்கிறார்கள் கனடாவை சேர்ந்த இரு விஞ்ஞானிகள். அவ்வாறு டைனோஸரில் இருந்து தோன்றி இருந்தால், இப் போது நாம் எப்படி இருக்கிறோமோ, அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, நாமே நம்மை கண்டு பயந்து ஓடுகிற மாதிரி இருந்திருப்போம். நல்லவேளை குரங்கில் இருந்து தோன் றியதால் தப்பித்தோம் (ஸோ… குரங்கை எக்காரணம் கொண்டும் திட்டாதீங்க).

***

அழகாக பாடுபவர்களை குயில் மாதிரி பாடுகிறீர்கள் என்று புகழ்வது வழக்கம். இப்படி புகழக்கூடிய குயில் கூடு கட்டுவதில்லை. இதிலும் ஒரு வகை பரிணாமம் தான் ஒட்டிக் கொண்டிருக்கிறது. கூடு கட்டி, அதில் முட்டையிட்டு, பொறிக்கும் குஞ்சுக்கு இரை ஊட்டக்கூடிய திறன் குயிலுக்கு இல்லை என்பதால், காகம் இல்லாத நேரத்தில் இதன் கூட்டுக்கு சென்று, அதன் முட்டைகளோடு தனது முட்டையையும் இட்டுவிட்டு `எஸ்கேப்’ ஆகிவிடுகிறது. எல்லா பறவைகளின் முட்டைகளும் ஒரே மாதிரியான உருவத்தில் இருப்பதில்லை. சில உருண்டையாக, சில சப்பையாக, சில ஒரு பகுதி மட்டும் கூர்மை யாக… என்று பலவிதங்களில் இருக்கும்.

உதாரணமாக, மலை உச்சியில் கூடு கட்டி வசிக்கும் பறவை, விலங்குகளின் முட்டை உருண்டையாக இருக்காது. ஒருவேளை உருண்டையாக இருந்தால் கீழே உருண்டு விழுந்து விடும் என்பதால் தான் இயற்கை அப்படி வைத்திருக்கிறது. இதுபோன்றது தான் குயிலின் நிலையும்!

Leave a Reply