Home » கொறிக்க... » கட்டுரைகள் » உங்க டூத்பேஸ்ட் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!

உங்க டூத்பேஸ்ட் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!

tooth_paste”உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? ” -னு சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்…

அப்புறம் ” உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? ” -னு அனுஷ்கா கேட்டாங்க… அதனால அதையும் வாங்கினேன்..

சரி மேட்டர்க்கு வருவோம்…

கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு அது இருக்கா..? இது இருக்கான்னு கேட்டாங்களே தவிர… அதுல நிக்கோடின் இருக்குன்னு யாருமே சொல்லலை…

என்னாது நிக்கோடினா..?!!

( அடப்பாவிகளா.. நிம்மதியா பல்லு வெளக்க கூட விட மாட்டீங்களா..?!!! )

DISPAR ( Delhi Institute of Pharmaceutical Sciences & Research ) நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின் இருக்குன்னு கண்டுபிடிச்சி இருக்காங்க..

( நிக்கோடின் கேன்சரை உண்டாக்கும் )

Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..

ஒரு சிகரெட்லயே 2mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..

அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா… அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்… அவ்வ்வ்….!!!

இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..?

”என்னங்க இது அநியாயமா இருக்கு..? நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?”- னு தானே கேக்க வர்றீங்க..?

ம்ம்… என்னங்க பண்றது..?

Leave a Reply