” மனைவி எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்..!! ” இப்படின்னு ஒரு பெரியவர் சொல்லி இருக்காரு..
அது சரி…, ஆனா.., அதுல எதாவது உள்குத்தும் இருக்குமோன்னு நான் சந்தேகப்படறேன்..
1. Function-க்கு கிளம்பறப்ப எவ்ளோ அழகான Dress-ஐ நாம போட்டு இருந்தாலும்..
‘ இது நல்லாவே இல்லைங்கன்னு ‘ சொல்லி…., நம்ம பீரோல இருந்து வேற Dress-ஐ அவங்களே
Select பண்ணி தர்றாங்களே…
அது…
** நாம அழகா தெரியவா..?
இல்ல
** நம்மகூட வரும்போது அவங்க Better-ஆ தெரியவா..??
2. நாம எவ்ளோ சொல்லியும் கேட்காம.., ” சிங்கம் – 2 “, ” கடல் ” இந்த மாதிரி படத்துக்கு நம்மள கூட்டிட்டு போக சொல்றாங்களே..
அது..
** படத்தை பார்க்கவா..?!!
இல்ல
** படத்தை பார்க்க முடியாம., நாம படற அவஸ்தையை பார்க்கவா..?!
3. பசங்களுக்கு ” Homework ” சொல்லி தர சொல்றாங்களே..
அது…
** பசங்க Homework முடிக்கவா..?
இல்ல
** பசங்ககிட்ட நம்ம Image-ஐ முடிக்கவா..??
4. அடுப்புல பால் வெச்சிருக்கேன் ஒரு நிமிஷம் பார்த்துக்கோங்கன்னு ‘ அப்பப்ப ஒரு பெரிய வேலை நமக்கு தர்றாங்களே…
அது…
** பால் பொங்காம இருக்கவா..?
இல்ல
** பால் பொங்கின அப்புறம் நம்மள பொங்கவா..??