மண்ணைப் பார்த்து நடந்து வரும் ஆணின்
மனதிற்கு சொல்லிட வேண்டும் உன் கால் மிஞ்சு..
நிமிர்ந்து பார்த்து நடந்து வரும் ஆணின்
நெஞ்சத்திற்கு சொல்லிட வேண்டும் உன் நெற்றிக் குங்குமம்…
கண்கள் பார்த்து பேசிடும் ஆணின்
கவனத்திற்கு சொல்லிட வேண்டும் உன் கழுத்து மாங்கல்யம்…
நீ இன்னொருவனின் இல்லாள் என்று…
கண் மை இட்டு கண்களை அழகாக எடுத்துக் காட்டுவதில் காலம் தவறாத நீ கழுத்தில் இருக்கும் மங்கல்யத்தை மறைப்பதேனோ??
குதிகால் செருப்பில் காலை அலங்கரிக்க மறக்காத நீ
கால் விரலின் மிஞ்சியை மறந்ததேனோ??
தலைவிரி கோலமே நாகரீகமெனும் தத்துவத்தை விரும்பும் நீ தலை வகுட்டில் வைக்கும் குங்குமத்தை விரும்பாததேனோ??
இவைகளை நீ சம்பிரதாயங்கள் என்கிறாய்
நான் சாட்சிகள் என்கிறேன்..
உன்னவனுக்கு மட்டுமே நீ உரியவளாய் இருக்க..
எவர் மனதிலும் நீ மாயம் செய்யாமல் இருக்க..
மறைத்திடாதே ஒரு போதும் இந்தச் சாட்சிகளை..
In the name of modernity, dont ignore our valueable culture and Tradition!