“சார், உங்க வண்டி ரெடியாயிடுச்சி … வந்து எடுத்துட்டு போங்க”
டூ வீலர் சர்வீஸ் சென்டரிலிருந்து போன் வந்தது.
போனேன்.
“வண்டிய ஓட்டி பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க சார் … ஏதாவது சரி பண்ண வேண்டியதிருந்தா சரி பண்ணி கொடுத்துடுறேன்”
சாவி கொடுத்தான். ஓட்டிப் பார்த்துவிட்டு,
“தம்பி, இது என் வண்டி மாதிரி இல்லை”
“இல்லை சார் … இது உங்க வண்டி தான் … ஸ்பிளெண்டர் ப்ளஸ் … நம்பர் வேணும்னாலும் செக் பண்ணிக்க்கோங்க”
பார்த்தேன்.
“அது சரிதான் தம்பி … ஆனால் இது என் வண்டி மாதிரி தெரியலையே” என்றேன் நான்.
“ஸ்பிளெண்டர் பிளஸ் தான் உங்க வண்டி, நம்பரும் சரிதான்டு சொல்றிங்க … அப்புறம் என்ன சார் சந்தேகம் உங்களுக்கு?”
“என் வண்டியில பிரேக் பிடிச்சதா சரித்திரமே கிடையாது … இதுல பிரேக் பிடிக்குதே … அப்படின்னா எப்படி என் வண்டியா இருக்கும்”
நான் பேசி முடித்ததும் அவன் என்னை பார்த்த பார்வை இருக்கே…..!!!
#ரொம்ப கோவக்கார பய போலிருக்கு … அடுத்த தடவை இவன்கிட்ட வண்டிய விடக்கூடாது!!