சான் பிரான்சிஸ்கோ: இன்டர்நெட் தேடுதல் பொறிகளில் ஒன்றான யாகூ, ஒரு காலத்தில் மிக புகழ்பெற்றதாக இருந்தது. ஆனால், கூகுள் வருகைக்கு பின்னர் அதன் நிலைமை மோசமாகி உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற மரிஸ்ஸா மேயர் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.
பர்பிள் நிறத்திலான லோகோவை யாகூ பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறது. மரிஸ்ஸா மேயரின் அதிரடியில், யாகூவின் லோகோவும் மாற்றப்பட்டு புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.