கடலில் பாரிய மீன் ஒன்றின் மீது ஒருவர் பய ணம் செய்யும் காட்சி அடங்கிய வீடியோ யூ ரியூப் இணையத் தளத்தில் வெளியாகி பெரும் எண்ணிக்கையானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பசுபிக் சமுத்திரத்தில் மெக்ஸிகோ கரையோரத்தில் இந்த காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது. மீன் மீது மீனவர் பயணம் செய்யும் காட்சியை படகொன்றில் நின்றவாறு அவரின் நண்பர்கள் படம்பிடித்துள்ளனர்.
“மோலா எனும் ரக மீனின் மீது அமர்ந்தவாறு மீனவர் ஒருவர் பயணம் செய்யும் காட்சி இதில் இடம்பெற்றுள்ளது. இந்த ரக மீன்கள் 11 அடி நீளமாக வளரக்கூடியவை எனவும் இவற்றின் எடை சுமார் 2500 வரை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.