கல்விக்கு “குறி” வை
அறிவை பெறலாம்
உழைப்புக்கு “குறி” வை
உயர்வை பெறலாம்
பணத்துக்கு “குறி” வை
பலருக்கு வேலைப்பெறலாம்
பண்புக்கு “குறி” வை
தூய அன்பைப பெறலாம்
அன்புக்கு “குறி” வை
நல்ல உறவினை பெறலாம்
நடப்புக்கு “குறி” வை
நல்ல சுற்றத்தை பெறலாம்
நேர்மைக்கு “குறி” வை
வாழ்வில் நிம்மதி பெறலாம்
நன்மைக்கு “குறி” வை
நீ சொர்க்கத்தை பெறலாம்
முரண்பட்டதுதான் வாழ்க்கை
முயற்சித்து பார்
உன் கூறிய குறிக்கோளால்
நீ கோபுரத்தை தொடலாம்.
-Kali Muthu