Home » காதல் » காதல் என்பது…

காதல் என்பது…

பாரதிராஜா (திரைப்பட இயக்குநர்)
காதல்தான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. நான் கண்ட கனவுகளைத்தான் என் படங்களில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

கே.பாக்யராஜ் (திரைப்பட இயக்குநர்)
காதலை நான் காயப்படுத்தி இருக்கிறேன். காதல்    என்னைக்   காயப்படுத்தி இருக்கு. ஆனா அதே காதல்தான் என் காயங்களையும் குணப்படுத்தி இருக்கு.

ரோஜா (திரைப்பட நடிகை)
கல்லூரியில் படிக்கும்போதுதான் காதல் பற்றி முழுமையாக தெரியும் என்பார்கள். என் கல்லூரி வாழ்க்கையிலும் நிறைய பேர் லெட்டர் கொடுக்க வந்தார்கள், அப்போது அதை பற்றியதான ஆர்வமும், சிந்தனையும் இல்லாததால் உதாžனப்படுத்தினேன். காதல் வெறும் கடிதங்களில் மட்டும் வருவது கிடையாது. அதுக்கு முக்கியமானது மனசு.

கவிஞர் அறிவுமதி
முழு விடுதலையைச் சுவாசித்து பூப்பதுதான் காதல். அது சிறைக்குள்ளும், எந்த விலங்குக்குள்ளும் அடைபட்டு, கட்டுப்பட்டு இருக்கச் சம்மதிக்காது.

கவிஞர் தாமரை
காதலர் தினம் கொண்டாடுவது என்பது நம் சமூகத்தை பொறுத்தவரை அபத்தமானது. வாழ்த்து அட்டை விற்பனையாளர்களுக்கு மட்டுமே உபயோகமானதாக இருக்கிறது. காதல் திருமணங்கள் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே இந்த சமூகம் முன்னேற்றமடையும்; பெண் அடிமைத்தனம் அழியும். அப்படியொரு சூழ்நிலை அமையும்போது காதலர் தினம் கொண்டாடுவதே பொறுத்தமாக அமையும்.

உஷா சுப்பிரமணியன் (எழுத்தாளர்)
காதலில் எனக்கு ரொம்ப நம்பிக்கை உண்டு. மனிதர்கள் எது இல்லாமலும் வாழலாம். ஆனால், காதல் இல்லாமல் வாழ முடியுமா? காதல் என்பது அருமையான விசயம். காதல் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. சினிமாவில் வரும் காதலை ரசிக்கிறார்கள்; எழுத்தில் வரும் காதலை ரசிக்கிறார்கள்.
ஆனால், தங்கள் வீட்டில் காதலித்தால் மட்டும் ஏதோ தவறு செய்வதாக நினைக்கிறார்கள். நான், என் குழந்தைகளை காதல் பண்ணச் சொல்லியிருக்கிறேன். அவர்களுக்கு காதல் திருமணத்தைத்தான் வலியுறுத்தி வருகிறேன். எனக்கு மட்டும் நிறைய பணம் இருந்தால், பீச்சில் வெயிலில் அமர்ந்து காதல் செய்பவர்களுக்கு தலைக்கு மேலே கூரை அமைத்துத் தருவேன். காதலர் தினத்தை ஒருநாள் மட்டும் கொண்டாடினால் போதாது, ஒவ்வொரு நாளும் கொண்டாட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். நான் என்றென்றும் காதலுக்கு அடிமை.

ஜெ.பிஸ்மி (பத்திரிகையாளர்)
காதலர் தினம்’ என்பது பொதுவாக வியாபார நோக்கம் கொண்டது. அந்த வகையில் அதன்மீது எனக்கு நிறைய விமர்சனங்கள் உண்டு. ஆனாலும், காதலர்கள் கொண்டாடுவதற்கான ஒருநாள் என்கிற வகையில் அதை வரவேற்கலாம். நம் சமூகத்தில் காதல் செய்வதையே மாபெரும் குற்றமாக கருதுகிறார்கள். சமூகத் தடைகளை மீறி இரகசியமாகவோ, வெளிப்படையாகவோ சந்தித்து மகிழ்வதற்கான ஒருநாள் என்பதற்காக காதலர் தினத்தை வரவேற்கிறேன். என் காதல் நிறைவேறி இருக்கிறது. ஒவ்வொரு காதலர் தினத்தையும் மனைவியோடு கொண்டாடுகிறேன்.
 
ஆர்.பார்த்திபன் (திரைப்பட இயக்குநர்)
கண்கள் கசியும் போதெல்லாம் அனுசரணையா அதை ஒத்தி எடுத்துவிட்டு ஆறுதலாக ஒரு பார்வை – அதன் பெயர்தான் காதல்.

ரேவதி (திரைப்பட நடிகை)
பரஸ்பரம் புரிஞ்சுக்கறதும், நம்பிக்கை வளர்க்கறதும், எல்லாம் மீறி ஏதாவது ஒரு எண்ண அலை ரெண்டு பேரும் இணையுறதுதான் காதல்.

டி.ராஜேந்தர் (திரைப்பட இயக்குனர்)
காதல் என்பது எல்லோருக்கும் உள்ள உணர்வு. பொதுவாக, நடிகை என்றால் அவர்களின் அங்கத்துக்காகத்தான் என்று கேவலமாக பார்க்கிறார்கள். அவர்கள் உள்ளத்திலும் காதல் உண்டு, பாசம் உண்டு, ஏக்கம் உண்டு. இவற்றையெல்லாம்விட நிறைய கண்­ரும் உண்டு. படாபட் ஜெயலட்சுமி, சிலுக்கு, ஏன் இப்போது விஜி இவர்களுக்கு இதயம் இல்லாமல் இருந்திருந்தால் காதலுக்காக உயிரை விட்டிருக்கமாட்டார்கள். காதல் முடவனையும் சிற்பியாக்கும், சிற்பியையும் முடவனாக்கும்.

வஸந்த் (திரைப்பட இயக்குனர்)
காதலில் மிகவும் அற்புதமான விஷயம் அந்தப் பார்வை பரிமாற்றம்தான். உண்மையான காதலர்களுக்கு அது புரியும்.

Leave a Reply