புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யு. புஷ் மொட்டை அடித்துள்ளார். இச்சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரகசிய உளவு அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவரின் 2 வயது மகன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். சிகிச்சையின் காரணமாக சிறுவனின் தலை முடி கொட்டி வருகிறது. இதனால் சிறுவன் வருத்தப்பட்டு சோகத்தில் ஆழ்ந்துள்ளான்.
சிறுவனின் சோகத்தைப் போக்க ஜோர்ஜ். எச்.டபிள்யு.புஷ் தானும் மொட்டையடித்துக் கொண்டுள்ளார். இதற்கு காரணம் 60 ஆண்டுகளுக்கு முன்னர் புஷ்ஷின் 4 வயது குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததுதான் என சொல்லப்படுகிறது.
அண்மையில் சுகயீனம் காரணமாக ஜோர்ஜ் எச்.டபிள்யு. புஷ் நீண்ட நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.