ஜப்பானிலுள்ள விளம்பர முகவர் நிறுவனமொன்று இளம் பெண்களின் தொடைகளை விளம்பரப் பதாகையாகப் பயன்படுத்துகிறது.
18 வயதுக்கு மேற்பட்ட இளம் பெண்கள் தமது கால் தொடைகளில் வர்த்தக விளம்பரங்களை வரைந்து கொள்வதற்காக பணம் வழங்குகிறது இந்நிறுவனம்.
இப்பெண்கள் மினி ஸ்கேர்ட், நீண்ட காலுறைகளால் கால்களை மறைத்துக்கொண்டு டோக்கியோ நகரில் 8 மணித்தியாலங்கள் நடமாடவேண்டும். குறைந்தபட்சம் 20 சமூக வலைத்தள தொடர்புகளை வைத்திருந்து தமது தொடை விளம்பரங்கள் தொடர்பான படங்களை வெளியிடவேண்டும் என இப்பெண்கள் கோரப்படுகின்றனர்.
இத்தகைய விளம்பரங்கள் மூலம் ஆண்களின் கவனத்தை ஈர்க்கலாம் என டோக்கியோவிலுள்ள மேற்படி விளம்பர முகவர் நிறுவனம் கருதுகிறது.
அதேவேளை, ஏற்கெனவே சுமார் 1300 பெண்கள் இத்திட்டத்தில் இணைந்துகொள்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.