Home » கொறிக்க... » வாழ்க நலமுடன் » டெலிபோனில் பேசினால்…

டெலிபோனில் பேசினால்…

டெலிபோனில் பேசும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு. அவைகளில் சில…
 
* வீட்டில் பெண் தனியாக இருக்கும்போது போன் வந்தால், போனில் பேசுவது நெருக்கமானவர்களாக இல்லாவிட்டால், தான் தனியாக இருப்பதை போனில் தெரிவித்துவிடக்கூடாது.

* ஆபாசம், அவதூறாக யாராவது டெலிபோனில் பேசினால் பதில் சொல்லாமலே இருந்து விடுங்கள்.

* டெலிபோனை எப்போதும் துடைத்து சுத்தமாக வைத்திருங்கள்.

* வாயில் உணவுப் பொருட்கள் எதையாவது வைத்துக்கொண்டு போனில் பேசவேண்டாம்.
 
* நீங்கள் விரும்பும்போது தொடர்பு கிடைக்காவிட்டாலோ, போனில் ஏதாவது கோளாறு இருந்தாலோ, உங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டாலோ அதை எல்லாம் போனில் காட்ட வேண்டாம். போனை மென்மையாகவே கையாளுங்கள்.

* பஸ்சிலோ, வேறு வாகனங்களிலோ சென்று கொண்டிருக்கும்போது சத்தமாக செல்போனில் பேசக்கூடாது. அது சக பயணிகளுக்கு தொந்தரவை ஏற்படுத்தும் என்பதைவிட, நீங்கள் பேசும் ரகசியமான விஷயங்களும் பிரச்சினைக்குரியவர்களுக்கு தெரிந்து விடும்.

* கோவில்கள், பிரார்த்தனை மையங்கள், அரங்கம், தியேட்டர், கூட்டம் நடக்கும் இடங்கள், வகுப்பறைகளில் செல்போன் பயன்படுத்த வேண்டாம்.

* வாகனங்களை ஓட்டிச்செல்லும்போது செல்போனில் பேசக்கூடாது.

* பொது இடங்களில் வைத்து செல்போன் வழியாக யாரிடமும் ஆத்திரமாக பேசவோ, கத்தவோ கூடாது.

* எந்த போனில் பேசினாலும் மெதுவாக பேச வேண்டும்.

Leave a Reply