அமெரிக்காவை சேர்ந்த ஒரு தம்பதி வாரத்திற்கு ஒருமுறை தங்களது இரத்தத்தை தங்களது ஜோடியுடன் பரிமாறிக்கொள்வதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் அரோ டிராவென். 38 வயதான இவர் திருமணம் முடித்து 5 குழந்தைகளின் தந்தையானவர், அண்மையில் ஒரு சமூக இணையதளம் மூலம் லியா பெனின்காப் என்னும் 20 வயது பெண்ணை சந்தித்துள்ளார்.
இவர்களுக்கு இடையே ஏற்பட்ட நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. இந்நிலையில், தங்களது உறவை அடுத்த கட்டதிற்கு கொண்டு செல்ல நினைத்த இவர்கள், ஒருவரின் இரத்தத்தை மற்றொருவர் குடிக்க தொடங்கினர். இவர்கள் இருவரும் தங்களது இரத்தத்தை ஒருவருக்கு ஒருவர் மாற்றி குடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
வாரத்தில் ஒரு முறையாவது இதுபோன்று இரத்தத்தை பரிமாறிக்கொள்ளும் இவர்கள், விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தெரிவித்த இந்த தம்பதி, இதுபோன்று இரத்தம் குடிப்பது எங்கள் இருவரது நட்பையும் மிகவும் நெருக்கமாக்குகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது இப்படி செய்வதை நாங்கள் வழக்கமாக கொண்டுள்ளோம் எனக் கூறியுள்ளனர்.