ஒரு மருமகன் எந்த வயதில் மாமியார் வீட்டிற்கு சென்றாலும் அவனது மாமியார் உயிரோடு இருக்கும் வரையில் சிறப்பாக சமைத்து விருந்து பரிமாறுவார்கள்… அது மகளின் கணவர் இவர் என்பதற்காக இல்லையாம்…
”அடேய் மருமகனே… நீ இப்போ விதவிதமா ருசிச்சு சாப்பிடுறியே… அப்படி சாப்பிட்டுத்தான் என் மகள் என் வீட்டில் வளர்ந்தாள்… உங்கள் வீட்டுக்கு என் மகள் வந்திருக்கிறாள்… உங்கள் வீட்டிலும் என் மகளை அப்படி கவனியுங்கள்” என்று அர்த்தமாம்.