இளைஞர் யுவதிகளே பலர்கூட உடற்பயிற்சிகளை புறக்கணிக்கும் நிலையில், முதியோர்களுக்கான உடற்கட்டுப் போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடைபெற்றது.
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் 50 வயதுக்கு மேற்பபட்ட சுமார் 300 தாத்தா, பாட்டிகள் ஆர்வமுடன் இப்போட்டிகளில் பங்குபற்றினர்.
75 வயதான ஜிம் ஷபார், 77 வயதான கார்ல் கோன் ஆகியோரும் இவர்களில் அடங்குவர். வயதானவர்கள் தாம் ஓய்வு பெறும் வீடுகளிலேயே தங்கியிருக்காமல் இப்போட்டிகளில் பங்குபற்ற முன்வந்தமை மகிழ்ச்சிக்குரியது என போட்டியாளர்களில் ஒருவர் கூறினார்.
64 வயது போட்டியாளரான ரிக் மேயர் கருத்துத் தெரிவிக்கையில், இப்போட்டிகளில் பங்குபற்றுவது என்னை வலிமையானவராக உணரச் செய்கிறது. உடற்பயிற்சிகளில் ஈடுபடாத எனது வயதையொத்த நபர்கள் சிறிய இலக்குகளை நிர்ணயித்துக்கொள்வதற்கு இந்தப் போட்டிகள் ஊக்குவிப்பாக அமையும் எனக் கருதுகிறேன்” என்றார்.
தான் வாரத்துக்கு 5 தடவை பயிற்சிகளில் ஈடுபடுவதாக 77 வயதான ஜிம் ஷபரார் கூறினார். இவர் வயதானவர்களுக்கான உடற்பயிற்சி பயிற்றுநராகவும் செயற்படுகிறார்.