முட்டைகளை பதமான முறையில் அரை அவியல் செய்யத் தடுமாறுகிறீர்களா? உங்களுக்காகவே இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனமொன்று ரெடி-மேட் அவித்த முட்டைகளை சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு தயாராகியுள்ளது.
இம்முட்டைகளை சற்று சூடாக்கிவிட்டு உட்கொள்ள முடியுமாம். பிளாஸ்டிக் குவளையில் பொதி செய்யப்பட்டுள்ள குவளையின் மூடியினை எடுத்து விட்டு அதனுள்ளேயே சுடுநீரை இட்டு வெறும் 5 நிமிடங்களில் அவித்த முட்டையை மூடியிலும் வைத்து நுகர்வோர் உண்ணலாம்.
அதேவேளை ஒவ்வொரு முறையும் பதமான மஞ்சள் கருவையும் நுகர்வோருக்கு வழங்கக் கூடியது என மேற்படி நிறுவனம் கூறுகின்றது.
பரபரப்பான வேலைகள் அல்லது முட்டை பதமாக அவிக்க தெரியாதவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையவுள்ளதாகக் கூறப்படும் இம்முட்டைகள் குறித்த விளக்கங்கள் அடங்கிய வீடியோவினையும் மேற்படி நிறுவனம் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் சந்தையில் அறிமுகப்படுத்தவும் குறித்த நிறுவனம் தயாராகியுள்ளது.