உடலும் மனதும் உற்சாகமாக இருந்தால் மட்டுமே தாம்பத்ய விளையாட்டினை ஆர்வமாக விளையாட முடியும். எந்த சிக்கலும் இன்றி ரிலாக்ஸ் ஆக இருக்க முதலில் அதற்கேற்ப மூடுக்கு கொண்டுவரவேண்டும். உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்வதில் மசாஜ் முக்கிய பங்கு வகிக்கிறது. மசாஜ் மூலம் உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு செல்லையும் உணர்ச்சியூட்ட முடியும். மசாஜ் செய்வது சாதாரணமாக எல்லோருக்கும் கைவந்து விடாது அது ஒரு கலை அதை எவ்வாறு கையாளவேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர் படியுங்களேன்.
மென்மையான படுக்கை
இரவோ, பகலோ உறுத்தல் இல்லாத மென்மையான வெளிச்சத்தில் படுக்கை அறை இருக்கவேண்டும். அதில் யாருக்கு மசாஜ் தேவையோ அவர்களை ரிலாக்ஸ் ஆக படுக்கவைத்து உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொள்ளுமாறு செய்துவிட்டு தேவையற்ற ஆடைகளை களையுங்கள். பஞ்சு மெத்தையைவிட தண்ணீர் படுக்கை இருந்தால் மசாஜ்க்கு மிகவும் ஏற்றது. கழுத்து, முழங்கால், உள்ளிட்ட இடங்களில் சற்றே தூக்கலாக தலையணையை வைத்துவிடுங்கள்.
வாசனையான எண்ணெய்
மசாஜ் செய்வதற்கு சிலர் வாசனை எண்ணெயை பயன்படுத்துவார்கள். சிலர் வெறும் கையையே பயன்படுத்தி உணர்ச்சியை உற்சாகமாக தூண்டுவார்கள். எண்ணெயை மெதுவாக சூடு படுத்திவைத்துக்கொள்வது நல்லது. அது தசைப்பிடிப்பையும், அழுத்தத்தையும் நீக்கும்.
படுக்கை அறையில் மெல்லிய வெளிச்சம் எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல மென்மையான இசையை கசிய விடுங்கள். அது இருவரையுமே உற்சாகப்படுத்தும்.
சரியாக தொடங்குங்கள்
எந்த ஒரு செயலையும் சரியாக தொடங்கினாலே பாதி வெற்றி கிடைத்துவிடும். மசாஜ் செய்வதும் அப்படித்தான் எங்கே தொடங்கி எப்படி முடிக்கிறோம் என்பதில்தான் வெற்றியின் சூட்சுமமே இருக்கிறது. மென்மையான கைகள்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் துணைக்கு தலையில் தொடங்குவது பிடிக்கும் எனில் உச்சந்தலையில் இருந்து தொடங்குங்கள். கால்களில் தொடங்குவது வசதி எனில் கால்களில் இருந்து மென்மையாய் ஆரம்பியுங்கள். பின்னர் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக போகஸ் செய்து மென்மையாக பிடித்து விடுங்கள். உடம்பின் ஒவ்வொரு செல்லும் உங்களின் மென்மையை உணரவேண்டும். வேறு எதுவும் வேண்டாம். நீங்கள் மசாஜ் செய்வதே உங்கள் துணையை ஆகாயத்தில் பறக்கச் செய்யும்.
சரியாக சொல்லுங்கள்
தோள் பட்டை பகுதியிலோ, முதுகுப் பகுதியிலோ கூடுதலாக மசாஜ் செய்யவேண்டும் என்று விரும்பினால் அதை உங்கள் துணையிடம் கூறலாம். அந்த இடத்தில் வலி இருக்கிறது. இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று சொல்லுங்கள். முதுகுப் பகுதியில் மசாஜ் செய்யும் போது துணையின் மீது ஏறி அமர்ந்து கூட செய்யலாம் அது கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
மசாஜ் செய்வது சாதாரணமாக எல்லோராலும் செய்து விட முடியாது அதற்கென நிபுணர்கள் இருக்கின்றனர். மசாஜ் பார்லர்களும் இருக்கின்றன. அங்கெல்லாம் சென்றால் செலவு பழுத்துவிடும் சரியான சுகமும் கிடைக்காது. எனவே வீட்டிலேயே உங்கள் துணையிடமே மசாஜ் செய்து கொள்வதுதான் செலவில்லாததும், பாதுகாப்பானதும் கூட என்கின்றனர் நிபுணர்கள்.