Home » காதல் » எனக்கென எடுத்து வைப்பவளே!

எனக்கென எடுத்து வைப்பவளே!

தாய் தந்தை மாமன் மாமி
தம்பி தங்கை உற்றார்
உறவினர்
சகலருக்கும்
மைத்துனருக்கும்
சமமான பார்வை
உன் பார்வை!என்னைப் பார்க்கும்
உனது விழிகளில்
எத்தனை தனிப்பார்வை! 
 
கெஞ்சும் பார்வை!
கொஞ்சும் பார்வை!
ஓரக்கண் பார்வை!
ஒவ்வொரு இரவிலும்
மார்பில் முகம் வைக்கும்
‘பாதிக்கண்” பார்வை!
உன்னைத் தொட்டு
என்னை இழந்தபோது
அன்னையைப் போல்
அடியவனின்
முடிகோதிவிடும்
“மாதா” பார்வை!
உன் தந்தை வந்தபோது
உள்ளார்ந்த ஒரு சிரிப்பு!
என் தந்தை வந்தபோது
அடக்கமான (பவ்யச்) சிரிப்பு!
உன் தாய் வந்தால்
ஒரு ‘மித”ச் சிரிப்பு!
என் தாய் வந்தால்
ஒரு ‘இத”ச் சிரிப்பு!
உன் உடன் பிறப்பார் வந்தால்
ஒரு ‘மூப்பு”ச் சிரிப்பு!
என் உடன் பிறப்பார் வந்தால்
ஒரு ‘தாய்மை”ச் சிரிப்பு!
என் ஆண் நண்பர்கள் வந்தால்
கண் அறிந்து- பின் ஒரு
‘கண்ணகி”ச் சிரிப்பு!
 
ஆனால் எனக்கு மட்டும்
அந்தரங்கச் சிரிப்பு!
ஆனந்தச் சிரிப்பு!
அறை குலுங்கும் சிரிப்பு!
தொட்டபோதெல்லாம்
வெட்கச் சிரிப்பு!
தொடாதபோதெல்லாம்
தொட்டிழுக்கும் சிரிப்பு!
 
பதார்த்தம்- தொடுகறி
பலருக்கும் சமமாய்
பரிமாறி வைப்பாய்!
 
எனக்கு மட்டும்
எது ஊற்றினாலும்
எனக்குத் தெரியும்!
எனக்கென்றே
எடுத்து வைத்திருப்பாய்
எழிலான சிறு பாத்திரத்தில்
எனக்குப் பிடித்ததை!
சுயநலமா- இது?
 
துணை நலம்-
துணைவன் நலம்!
 
உன் உடலில் கூட
எனக்கென்று
எடுத்து வைத்திருப்பாய்- பிறவி
எடுத்த நாள் முதலாய்!
 
பெற்றோர் தொட்டதுண்டு!
பிள்ளைகளும் தொட்டதுண்டு!
 
அவர்கள் தொடாத
அழகுப் பழந்தோட்டத்தை
எனக்கென்றெ எடுத்து வைத்த
என்னவளே வாழ்க!
 
அடியார்-

Leave a Reply